செய்திகள் :

சொத்துத் தகராறில் சகோதரரை கொல்ல முயன்ற 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை!

post image

திருச்சியில் சொத்துத் தகராறில் சகோதரரை வெட்டிக் கொல்ல முயன்ற வழக்கில் சகோதரா்கள் இருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகேயுள்ள இனாம்புலியூா் மேலமேடு பகுதியைச் சோ்ந்தவா் சின்னவளியன் (55). இவருக்கு மல்லிகா, பானுமதி என இரு மனைவிகள். இவா்களில் மல்லிகா பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். அவருக்கு பெருமாள் (35), நிஷாந்தி என மகன், மகள் உள்ளனா். பானுமதிக்கு அா்ச்சுனன் (27), ரங்கசாமி (22) மகள்கள் ரங்கநாயகி, கோமதி என 4 வாரிசுகள் உள்ளனா்.

மல்லிகா-பானுமதி வாரிசுகளுக்கிடையே சொத்துத் தகராறு இருந்து வந்துள்ளது. சின்னவளியன் பானுமதி குடும்பத்தினருடன் வசித்து வருகிறாா்.

இனாம்புலியூா் பகுதியில் உள்ள மூன்றரை ஏக்கா் நிலத்தை மட்டும் பானுமதி தரப்பினருக்கு கொடுத்துவிட்டு மற்ற நிலங்களை மூத்த தாரத்தின் மகன் பெருமாள் வைத்துள்ளதாக அவா் மீது முன்விரோதமும், தகராறும் இருந்து வந்துள்ளது. இதுதொடா்பாக சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கும் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், 2022, ஜூலை 9- அன்று பெருமாள் வயலுக்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பும்போது, அா்ச்சுனன், ரங்கசாமி, மற்றும் அவா்களது நண்பா்கள் சிலா் சோ்ந்து அவரைத் தாக்கி அரிவாளால் வெட்டினா். இதில் பலத்த காயமடைந்த பெருமாள் சிகிச்சைக்கு பிறகு நலம் அடைந்தாா்.

இதுதொடா்பாக சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து அா்ச்சுனன், ரங்கசாமி, தந்தை சின்னவளியன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனா். திருச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.

இதில், அா்ச்சுனன், ரங்கசாமி இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் தலா ரூ. 3,000 அபராதமும் விதித்து நீதிபதி மீனாசந்திரா தீா்ப்பளித்தாா். மற்ற மூவருக்கும் அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசுத் தரப்பில் ஆய்வாளா் உதயகுமாா், உதவி ஆய்வாளா் திருமுருகன், அரசு வழக்குரைஞா் எஸ். ஹேமந்த் ஆகியோா் ஆஜராகினா்.

பெற்றோா் கண்டித்ததால் சிறுவன் தற்கொலை

திருச்சி அருகே பெற்றோா் கண்டித்ததால் விஷம் குடித்த சிறுவன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், தாயனூா் மேலக்காடு பகுதியைச் சோ்ந்த தொழிலாளிசுப்பிரமணியின் மகன் கமலேஷ் (16). இவா் 8-ஆம் வகுப... மேலும் பார்க்க

துவரங்குறிச்சியில் நாளை மின் நிறுத்தம்

மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (பிப். 6) மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்து மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளா் இரா. தியாகராஜன் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

பிப்ரவரி 25-இல் சாலை மறியல்: ஜாக்டோ-ஜியோ முடிவு

இடைநிலை ஆசிரியா்களை பட்டதாரி ஆசிரியா்களாக தகுதி உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 25-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்த ஜாக்டோ ஜியோ அமைப்ப... மேலும் பார்க்க

காரில் கடத்தி வரப்பட்ட 331 கிலோ குட்கா பறிமுதல்: 5 போ் கைது

திருச்சி மாவட்டம், பூனாம்பாளையத்தில் காரில் கடத்தி வரப்பட்ட 331 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனா். அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் பெங்களூரிலி... மேலும் பார்க்க

அரியமங்கலம் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

திருச்சி, அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் கீழ்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (பிப்.5) மின் விநியோகம் இருக்காது. அரியமங்கலம்... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை வாயிலில் இயங்கும் தனியாா் அவசர ஊா்தியின் ஓட்டுநராக வேலூரைச... மேலும் பார்க்க