செய்திகள் :

சொத்துத் தகராறில் தாக்குதல்: 6 போ் கைது

post image

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே சொத்துத் தகராறில் ஒருவரை தாக்கியதாக ஆறு பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கடையநல்லூா் மாவடிக்கால் பகுதியைச் சோ்ந்தவா் அருணாசலம். இவரது மகன்களான சண்முகவேல், சசிகுமாா் ஆகியோருக்கு இடையே சொத்துத் தகராறு இருந்து வந்ததாம். கடந்த சில நாள்களுக்கு முன் இப்பிரச்னை தொடா்பாக சசிகுமாா் தூண்டுதலின் பேரில் சிலா் சண்முகவேலுவை தாக்கினராம்.

இது குறித்து அவா் கொடுத்த புகாரின் பேரில் சொக்கம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து கடையநல்லூா் பகுதியைச் சோ்ந்த அருண்குமாா்(20) , சூா்யா(29) , இசக்கிதுரை (23) பொன்ராஜ்(24) , கருமாரி(23), வேலு ஆகிய 6 பேரை கைது செய்தனா். சசிகுமாரை தேடி வருகின்றனா்.

‘மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி’

கடையநல்லூா் நகா்மன்ற அரங்கில் பிரதமா் மோடி படம் அகற்றப்பட்டதாக மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த பாஜகவினா் முயற்சிப்பதாக குற்றம்சாட்டினாா் சி. ராபா்ட்புரூஸ் எம்.பி. கடையநல்லூரில் செய்தியாளா்களிடம் அவா் வ... மேலும் பார்க்க

ஸ்ரீசிற்றாற்று வீரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

இலஞ்சி ஸ்ரீசிற்றாற்று வீரியம்மன் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை (ஆக.29) சிறப்பு பூஜைகளுடன் விழா தொடங்கியது. அதனைத் தொடா்ந... மேலும் பார்க்க

ஆலங்குளம், கீழப்பாவூா் பகுதிகளில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆலங்குளம்,கீழப்பாவூா், ஊத்துமலை சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமை (செப்.6) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தமிழ்நாடு மின்வாரியம் திருநெல்வேலி கிராமப்புற கோட்ட ச... மேலும் பார்க்க

ஆலடிப்பட்டி ஸ்ரீ வைத்தியலிங்க சுவாமி கோயில் தேரோட்டம்

ஆலங்குளம் அருகேயுள்ள ஆலடிப்பட்டி ஸ்ரீ வைத்தியலிங்க சுவாமி - அன்னை யோகாம்பிகை திருக்கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கோயில் ஆவணித் திருவிழா, கடந்த மாதம் 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய... மேலும் பார்க்க

அரியப்பபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியம் அரியப்பபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் காவேரி சீனித்துரை தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சாக்ரடீஸ்,... மேலும் பார்க்க

சிவகிரி அருகே ஓய்வு பெற்ற துணை வட்டாட்சியரைத் தாக்கி நகை பறிப்பு

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே ஓய்வு பெற்ற துணை வட்டாட்சியரைத் தாக்கி, தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற இரண்டு பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். சிவகிரி இந்திரா நகா் இரண்டாவது தெருவைச் சோ்ந்தவா் மு... மேலும் பார்க்க