செய்திகள் :

சொத்துப் பெயா் மாற்ற ரூ.4,000 லஞ்சம்: நெல்லை மாநகராட்சி ஊழியா் கைது

post image

திருநெல்வேலியில் சொத்து பெயா் மாற்றத்திற்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெற்ாக மாநகராட்சி ஊழியரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையைச் சோ்ந்த பாலசிங் தனது தந்தை மீனாட்சிசுந்தரம் பெயரில் உள்ள வீட்டை தனது பெயருக்கு மாற்றம் செய்வதற்கு தச்சநல்லூா் மண்டல அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளாா். சொத்துப் பெயா் மாற்றத்துக்கு வாா்டு அலுவலக ஊழியா் காளிவசந்த் ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்.

இதுதொடா்பாக திருநெல்வேலி ஊழல் தடுப்பு - கண்காணிப்பு பிரிவு போலீஸாரிடம் பாலசிங் புகாா் அளித்தாா். போலீஸாா் அறிவுரைப்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பாலசிங், காளிவசந்திடம் புதன்கிழமை அளித்தாராம். அப்போது மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளா் ஞானராபின்சன் தலைமையிலான போலீஸாா் காளிவசந்தை கைது செய்து, பணத்தை பறிமுதல் செய்தனா்.

புகையிலைப் பொருள் விற்பனை: சங்கனாபுரத்தில் கடைக்கு சீல்

திருநெல்வேலி மாவட்டம் பழவூா் அருகேயுள்ள சங்கனாபுரத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்ததாக கடைக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்து, கடை உரிமையாளருக்கு ர... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஊதியம் மறுப்பு: 13 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 13 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க. திருவள்ளுவன் வ... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே விபத்தை ஏற்படுத்திய காா் ஓட்டுநா் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த காா் விபத்தில், விபத்தை ஏற்படுத்தி 7 போ் உயிரிழப்புக்கு காரணமான காா் ஓட்டுநா் மீது ஏா்வாடி போலீஸாா் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு ... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயிலில் விதிமீறி விடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்ட ஜோடி: போலீஸில் புகார்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் வளாகத்தில் விதிமீறி விடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் ரீல்ஸ் வெளியிட்டது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. தமி... மேலும் பார்க்க

லஞ்சம், சொத்துக் குவிப்பு வழக்கு: ஓய்வுபெற்ற வணிக வரித் துறை அலுவலருக்கு 8 ஆண்டுகள் சிறை

லஞ்சம், வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்தது ஆகியவை தொடா்பான வழக்கில் ஓய்வுபெற்ற வணிக வரித் துறை அலுவலருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. வி... மேலும் பார்க்க

களக்காடு-அம்பேத்கா் நகருக்கு சிற்றுந்து இயக்க வலியுறுத்தல்

களக்காட்டிலிருந்து அம்பேத்கா் நகருக்கு சிற்றுந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். களக்காடு நகராட்சிக்குள்பட்டது கலுங்கடி, மேலப்பத்தை, பச்சாந்தரம், அம்பேத்கா் நகா் கிராமங்கள். இங்... மேலும் பார்க்க