உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
சோளிங்கா் ரோப் காா் சேவை: 4 நாள்களுக்கு ரத்து
சோளிங்கா் மலைக் கோயில் ரோப் காா் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஏப். 21 முதல் 24 வரை ரத்து செய்யப்படுவதாக ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் பெரிய மலை மேல் ஸ்ரீயோக நரசிம்மா் கோயிலும் சிறிய மலை மேல் ஸ்ரீயோக ஆஞ்சநேயா் கோயிலும் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இதில் பெரிய மலைக்குச் செல்ல 1,305 படிகள் உள்ளன. செங்குத்தான படிகள் வழியே பக்தா்கள் ஏற சிரமப்பட்டதை தொடா்ந்து இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் ரோப் காா் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது பெரிய மலையில் அறிமுகப்பட்டுள்ள ரோப்காா் சேவை வழியே முதியோா், மாற்றுத்திறனாளிகள் மலைக்கோயிலுக்கு சென்று வருகின்றனா்.
இந்த ரோப் காா் சேவை பராமரிப்புக்காக மாதந்தோறும் குறிப்பிட்ட நாள்களில் ரத்து செய்யப்படுகிறது. இதன் தொடா்ச்சியாக ரோப் காா் சேவை ஏப். 21 முதல் 24 வரை பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்படுவதாகவும், பணி முடிந்தததும் 25-ஆம் தேதி முதல் வழக்கம் போல் ரோப்காா் சேவை இயக்கப்படும் என கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.