அம்பேத்கர் குறித்த பாஜகவின் பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது: மமதா
ஜனநாயகத்தில் இதுபோன்ற வன்முறைக்கு இடமில்லை: ஒடிசா முதல்வர்!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பொறுப்பற்ற, ஆட்சேபனையற்ற நடத்தையால் பாஜகவின் எம்பி காயமடைந்துள்ளதாக ஒடிசா முதல்வர் சரண் மாஜீ தெரிவித்தார்.
இதுதொடர்பாக ஒடிசா முதல்வர் கூறுகையில்,
நாடாளுமன்றத்தில் இன்று நிகழ்ந்த சம்பவம் வன்மையாகக் கண்டிக்கிறோம். பாஜகவின் பாலசோர் எம்பி பிரதாப் சாரங்கி விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன்.
காந்தியின் அத்தகைய செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.. ஜனநாயகத்தின் புனிதத்தை அவமதிப்பதாகவும் உள்ளது.
நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியின் பொறுப்பற்ற மற்றும் ஆட்சேபனையற்ற நடத்தை காரணமாக எங்கள் கட்சியின் மூத்த தலைவரும் சாரங்கி காயமடைந்தார்.
ஜனநாயகத்தில் இதுபோன்ற வன்முறைக்கு இடமில்லை. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது துரதிர்ஷ்டவசமானது என்று அவர் கூறினார்.
அம்பேத்கரை அவமதித்ததாகக் கூறப்படும் நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளுக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால், முன்னாள் மத்திய அமைச்சர் சாரங்கி காயமடைந்தார்.
மூத்த உறுப்பினரை ராகுல் தள்ளிவிட்டதாக பாஜக குற்றம் சாட்டியது, அந்தக் குற்றச்சாட்டைக் காங்கிரஸ் தலைவர் நிராகரித்துள்ளார்.