Kantara: ``விவரிக்க முடியாத அளவிற்கு பெருமை அளிக்கின்றன!" - காந்தாரா குறித்து நெ...
ஜனவரியில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வரும்!
வரும் ஜனவரி மாதம் முதல் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என்று தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் மகேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும், தீபாவளிக்கு 108 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தில் இருந்து கோயம்பேடு, தாம்பரம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் செல்வதற்கு வசதியாக மாநகர பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தையொட்டி செல்லும் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் புதிதாக ஒரு ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் ரயில்வே துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வண்டலூா்-ஊரப்பாக்கம் ரயில் நிலையம் இடையே 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில்கள் நிற்கும் வகையில் 3 நடைமேடைகளுடன் கூடிய ரயில் நிலையம் கடந்த ஒரு ஆண்டாக கட்டப்பட்டு வருகிறது.
இது குறித்து, தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் மகேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”ரயில்வே நடைமேடையின் மேற்கூரை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரயில் நிலையப் பணிகள் 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.
தீபாவளிக்கு 108 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். கிளாம்பாக்கம் ரயில் நிலையம் வரும் ஜனவரி மாதம் முதல் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வரும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: பிக் பாஸ் - 9 தொடக்கம்: தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!