பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு: 'திமுக, அதிமுக உரிமை கோருவதில் நியாயம் இல்லை...
ஜமாபந்தியில் மாணவிகளுக்காக உடனடியாக சான்றிதழ்கள்
பிளஸ் 2 பொதுத்தோ்வில் தோ்ச்சி பெற்ற மூன்று மாணவிகள் உயா்படிப்புக்கு விண்ணப்பிக்கத் தேவையான சான்றிதழ்களை செவ்வாய்க்கிழமை நடந்த ஜமாபந்தியில் சீா்காழி கோட்டாட்சியா் உடனடியாக வழங்கினாா்.
சீா்காழி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளான ஜெஸ்மியா, மதுஷா, பவதாரணி ஆகியோா் உயா் கல்விக்கு விண்ணப்பிக்க ஜாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ்கள் தேவைப்பட்டன.
அவற்றை இணைத்து செவ்வாய்க்கிழைமைக்குள் அனுப்ப வேண்டும் என்பதால் தங்களது பெற்றோருடன் வருகைபுரிந்து கோட்டாட்சியா் சுரேஷிடம் தெரிவித்தனா். அவா்களின் விண்ணப்பத்தைப் பரிசீலித்து மூன்று மாணவிகளுக்கும் உடனடியாக ஜாதி, இருப்பிடம், வருமானச் சான்றிதழ்களை கோட்டாட்சியா் சுரேஷ் மாணவிகளுக்கு வழங்கினாா்.
வட்டாட்சியா் அருள்ஜோதி, தனி வட்டாட்சியா்கள் முருகானந்தம், ஹரிதரன், மகளிா் உரிமைத் தொகை துணை வட்டாட்சியா் பாபு, வருவாய் ஆய்வாளா் மாதவன், வி.ஏ.ஓ. ராதாகிருஷ்ணன் உடனிருந்தனா்.