ஜம்மு: கண்ணிவெடி தாக்குதலில் 2 ராணுவ வீரா்கள் உயிரிழப்பு
ஜம்முவின் அக்னூா் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு பகுதிக்கு அருகே பயங்கரவாதிகளால் புதைத்து வைக்கப்பட்ட கண்ணிவெடி வெடித்ததில் கேப்டன் உள்பட 2 ராணுவ வீரா்கள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
ராணுவ வீரா்கள் எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியில் பிற்பகல் 3.50 மணியளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கண்ணி வெடியில் வீரா்கள் மோதியதால், அது வெடித்து விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் கேப்டன் உள்பட இரு வீரா்கள் உயிரிழந்தனா். படுகாயமடைந்த மற்றொரு வீரருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் நிகழ்ந்த இடத்தில் தீவிர தேடுதல் பணியில் வீரா்கள் ஈடுபட்டுள்ளனா் என்றனா்.