செய்திகள் :

ஜம்மு & காஷ்மீர்: அரசு அலுவலங்களில் வாட்ஸ்ஆப், பென் டிரைவ் பயன்படுத்த தடை - ஏன்?

post image

ஜம்மு & காஷ்மீர் அரசு, அனைத்து நிர்வாகத் துறைகள் மற்றும் மாவட்டங்களில் உள்ள துணை ஆணையர் அலுவலகங்களில் உள்ள அதிகாரப்பூர்வ கணினிகளில் பென் டிரைவ்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நடவடிக்கை தரவுகளை பாதுகாக்கவும், பாதுகாப்பு மீறல்களைத் தடுக்கவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் போன்ற பொது தளங்களை அல்லது iLovePDF போன்ற ஆன்லைன் சேவைகளை அதிகாரப்பூர்வ, ரகசிய ஆவணங்களை பகிர அல்லது சேமிக்க பயன்படுத்தக் கூடாது என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.

சித்தரிப்பு படம்

இந்த உத்தரவு, யூனியன் பிரதேசத்தின் சைபர் பாதுகாப்பை மேம்படுத்தவும், முக்கியமான அரசு தகவல்களைப் பாதுகாக்கவும், தரவு மீறல்கள், மால்வேர் தாக்குதல்கள் ஆகியவற்றை தடுக்க எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு கேள்விக்கு பதிலளித்த ஜம்மு & காஷ்மீர் அரசு, 91 இணையதளங்கள் 'பாதுகாப்பானது' (safe to host) என்ற சான்றிதழ் இல்லாததால் இன்னும் செயல்படாத நிலையில் உள்ளதாகத் தெரிவித்தது.

மே மாதத்தில் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடர்பாக, இந்திய இணையதளங்கள் மீது, குறிப்பாக ஜம்மு & காஷ்மீரில் உள்ள பெரும்பாலான அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மீது சைபர் தாக்குதல்கள் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காஸா மருத்துவமனை மீது தாக்குதல்; 5 பத்திரிகையாளர்கள் உள்பட 20 பேர் பலி - நெதன்யாகு சொல்வதென்ன?

இஸ்ரேல் - காஸா போர் இஸ்ரேல் - காஸாவுக்கு இடையே தொடர்ந்துவரும் போரில் நாளுக்கு நாள் நிலமை கொடூரமாகிக்கொண்டே இருக்கிறது. தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸின் முக்கிய சுகாதார மையமான நாசர் மருத்துவமனை மீது ... மேலும் பார்க்க

`15 வயதில் அரசுக்கு எதிராக போராட்டம்' -30 வயதில் தூக்கு; சவுதி அரேபியாவுக்கு குவியும் கண்டனம்

சவுதி அரேபியாவில் 15 வயது சிறுவனாக இருந்த போது, அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, தற்போது 30 வயதில் அவரைத் தூக்கில் ஏற்றிய சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்பட... மேலும் பார்க்க

BJP -ல் இவர்தான் MGR - நயினார் அதிரடி! | Rahul Gandhi Anurag Thakur BJP TVK DMK | Imperfect Show

* முதலில் விண்வெளிக்குச் சென்றது அனுமனா? - மாணவர்களுடன் பேசிய பாஜக எம்.பி. அனுராக் தாக்கூரின் வீடியோ வைரல்* `அறிவியல் கட்டுக்கதையல்ல...' - கனிமொழி கண்டனம்* அனுராக்கை கிண்டல் செய்து விமர்சித்த சு.வெங்க... மேலும் பார்க்க

``கூட்டத்துக்கு வந்தீங்களா, சாப்பிட வந்தீங்களா?'' - முன்னாள் அமைச்சரின் எரிச்சல் பேச்சு

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஒன்றிய அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஏஜெண்டுகள் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கலந்து... மேலும் பார்க்க