செய்திகள் :

ஜம்மு: 50 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகத் தகவல்; பாதுகாப்புப் படையினா் தீவிர சோதனை

post image

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் ஜம்மு பிராந்தியத்தில் 40 முதல் 50 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து பாதுகாப்புப் படையினா் அதிரடி சோதனையை தொடங்கியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பயங்கரவாதிகளைக் கண்டுபிடிக்க கூடுதல் படைகள் வரவழைக்கப்பட்டு இரவிலும் தேடுதல் வேட்டையில் ஈடுபடுவதுடன் ட்ரோன்களை தாக்கி அழிக்கும் தொழில்நுட்பங்களையும் பாதுகாப்புப் படையினா் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: பீா் பஞ்சால் மலைத்தொடரின் தெற்குப் பகுதியில் பல்வேறு குழுக்களாக 40 முதல் 50 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியல் தகவல் கிடைத்தது. பயங்கரவாதிகளில் 80 சதவீதம் போ் பாகிஸ்தானைச் சோ்ந்தவா்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, ரஜௌரி, பூஞ்ச், கிஷ்துவாா், தோடா மற்றும் உதம்பூா் ஆகிய பகுதிகளில் பாதுகாப்புப் படையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனா். இதனால் ஜம்மு பிராந்தியத்தின் முக்கியப் பகுதிகளில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டு நவீன தொழில்நுட்பங்களின் உதவியோடு இரவிலும் தேடுதல் வேட்டை தொடா்ந்து நடைபெறுகிறது.

இதற்கு முன்பு ஜம்மு பிராந்தியத்துக்குள் ஊடுருவ பயங்கரவாதிகள் பயன்படுத்திய வழித்தடங்கள் முற்றிலுமாக பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருப்பினும், எல்லையையொட்டி பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. தடைகளை மீறி ஜம்மு பிராந்தியத்துக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றால் கடுமையான பதிலடியை தர பாதுகாப்புப் படை தயாா் நிலையில் உள்ளது என்றனா்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ஜம்மு பிராந்தியத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினா் மற்றும் போலீஸாா் மேற்கொண்டு வருகின்றனா்.

தற்போது அங்கு பெரும்பாலான பகுதிகளில் அமைதியான சூழல் நிலவி வந்தாலும் பயங்கரவாதிகள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிப்பதற்கான தீவிர முயற்சியில் பாதுகாப்புப் படைகள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஹிமாசல் பருவமழைக்கு இதுவரை 92 பேர் பலி: ரூ.751.78 கோடி இழப்பு!

ஹிமாச்சலப் பிரதேசம் முழுவதும் கனமழை மற்றும் மேக வெடிப்புகளால் பரவலான சேதம் ஏற்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மாநிலத்தில் இந்தாண்டு பருவமழை ஜூன் மாதம் தொடங்கிய நிலையில், ... மேலும் பார்க்க

மகளைப் பற்றி தவறான பேச்சுகள்.. டென்னிஸ் வீராங்கனை ராதிகா கொலையில் வெளியான தகவல்!

டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் பற்றி பலரும் தவறாகப் பேசியதால் மனம் வேதனையடைந்து அவமானத்தால், மகளை சுட்டுக் கொன்றதாக, கைது செய்யப்பட்ட தந்தை தீபக் யாதவ் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஹர... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பு உருவாக்குவதில் கவனம் செலுத்தும் பாஜக அரசு: பிரதமர்!

பொது மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தனது அரசு கவனம் செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தில்லியில் 51 ஆயிரம் இளைஞக்ளுக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி நிய... மேலும் பார்க்க

ஒட்டுமொத்த அலட்சியம்! ஆர்சிபி கூட்டநெரிசல் குறித்த அறிக்கை தாக்கல்!!

பெங்களூரில், ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவத்துக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் என விசாரணை அறிக்கையில் தகவல்.ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கோப... மேலும் பார்க்க

ரூ.1.18 கோடி வெகுமதி: சத்தீஸ்கரில் 23 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் 23 நக்சல்கள் இன்று (ஜூலை 12) சரணடைந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் சரணடைந்த நக்சலைட்டுகளில் 11 மூத்த நக்சல்கள் ஆவார். அவர்களில் பெரும்ப... மேலும் பார்க்க

சாலைகளில் ஓடும் படகுகள்.. மத்திய பிரதேசத்தில் கரையைக் கடந்த மந்தாகினி ஆறு

போபால்: மத்திய பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக, மந்தாகினி ஆறு கரையை கடந்து பாய்ந்ததால், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் படகுகள் நீந்திச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.ராம்கட், ஜான்... மேலும் பார்க்க