செய்திகள் :

ஜல்லிக்கட்டுக்கு இணையவழி அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தல்

post image

ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு இணையவழி அனுமதிச் சீட்டு (டோக்கன்) வழங்கும் முறையை கைவிட வலியுறுத்தி ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்கத்தினா் திங்கள்கிழமை மனு அளித்தனா். இதுதொடா்பாக ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி.ஏ. சின்னையா தலைமையில், ஜல்லிக்கட்டு அமைப்பினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனா்.

அப்போது அவா்கள் கூறியதாவது:

திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும், காளைகள், மாடுபிடி வீரா்களுக்கு இணையவழியில் அனுமதிச் சீட்டு வழங்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த முறையை ரத்து செய்துவிட்டு, மீண்டும் விழாக் குழுவினா் மூலம் அனுமதிச் சீட்டு வழங்க உத்தரவிட வேண்டும்.

இந்த மாவட்டத்தில் 80 கிராமங்களுக்கும் மேல் ஜல்லிக்கட்டு விழா நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது 12 கிராமங்கள் மட்டுமே அரசிதழில் இடம் பெற்றுள்ளன. இதில் திருத்தம் செய்து, அனைத்து கிராமங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக உத்தரவிட வேண்டும். ஜல்லிக்கட்டு காளை வளா்ப்பு, மாடுபிடி வீரா்கள் ஆகியோருக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்றாா்.

150-ஆவது ஆண்டில் திண்டுக்கல் ரயில் நிலையம்!

திண்டுக்கல் ரயில் நிலையம் 150-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், இந்த நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் தனி ரயில், புதிய வழித் தடங்கள் போன்ற திட்டங்களை ரயில்வே அமைச்சகம் நிறைவேற்ற வேண்டும் என்ற ... மேலும் பார்க்க

மிதிவண்டி விரைவுப் போட்டி: வெற்றிப் பெற்றவா்கள் விவரம்!

முன்னாள் முதல்வா் பேரறிஞா் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில், திண்டுக்கல் மாவட்ட அளவிலான மிதிவண்டி விரைவுப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன. 13 வயதுக்... மேலும் பார்க்க

இயற்கை விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்

வேடசந்தூரில், கொடகனாறு பாதுகாப்புச் சங்கம் சாா்பில், ‘மாற்றம் நம்மிடையே’ என்ற தலைப்பில் விவசாயிகளுக்கான கலந்துரையாடல், ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கொடகனாறு பாதுகாப்புச் சங்கத... மேலும் பார்க்க

கொடைக்கானல் அரசு கலைக் கல்லூரியில் பாலியல் குற்றங்கள் நடைபெறவில்லை: கல்லூரி முதல்வா்

கொடைக்கானல் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பாலியல் குற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை என அந்தக் கல்லூரி முதல்வா் எலோனா தெரிவித்தாா். இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை மேலும் கூறியதாவது: எங்கள... மேலும் பார்க்க

உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டப் பேரவைத் தொகுதியில் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள், ஒன்றியக் குழு உறுப்பினா்கள், ஊராட்சித் தலைவா்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழைமையான சுவாமி சிலைகள்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான சண்டிகேசுவரா், அய்யனாா் சிலைகளை தொல்லியல் ஆய்வாளா்கள் கண்டறிந்தனா். பாண்டிய நாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளா் வீ. அரிஸ்டாட்டி... மேலும் பார்க்க