செய்திகள் :

ஜாதவ்பூர் பல்கலை. வளாகத்தில் மயக்க நிலையில் மீட்கப்பட்ட மாணவி உயிரிழப்பு

post image

ஜாதவ்பூர் பல்கலை. வளாகத்தில் மயக்க நிலையில் மீட்கப்பட்ட மாணவி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கம் மாநிலம், ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு இளங்கலை பயின்று வந்த மாணவி வியாழக்கிழமை இரவு மயக்க நிலையில் வளாகத்தில் இருந்து மீட்கப்பட்டார்.

மாணவியை அவரது நண்பர்கள் மற்றும் பிற பல்கலைக்கழக ஊழியர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு அவர் இறந்துவிட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாலையில் அவர் தனது வகுப்பு தோழர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்ததாக மற்றொரு பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தில்லியைத் தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல்

சம்பவத்திற்குப் பின்னால் உள்ள சூழ்நிலைகள் தெளிவாகத் தெரியவில்லை.

மேலும் மாணவியின் பெயரையும் பல்கலைக்கழக அதிகாரிகள் வெளியிடவில்லை. வளாகத்தில் உள்ள நீர்நிலையின் ஓரத்தில் மயக்க நிலையில் மாணவி மீட்கப்பட்டதாக தகவல் தெரிய வந்ததுள்ளது. இச்சம்பவம் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

A female student of Jadavpur University (JU) was declared dead after being rushed to a nearby hospital in unconscious state on Thursday night, a senior university official said.

ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் சக்கரம் திடீரென கழன்று விழுந்ததால் பரபரப்பு

கண்ட்லா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் சக்கரம் கழன்று விழுந்ததால் பரபரப்பு நிலவியது. குஜராத்தின் கண்ட்லாவில் இருந்து 80 பயணிகளுடன் ஸ்பைஸ்ஜெட் விமானம் மும்பைக்கு வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

தில்லியைத் தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

தில்லியைத் தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், மும்பை உயர்நீதிமன்றத்திற்கு மிரட்டல் விடுத்து உயர்நீதிமன்றத்தி... மேலும் பார்க்க

நேபாள வன்முறை: மேற்கு வங்கம் வழியாக நாடு திரும்பிய 2,000 இந்தியர்கள்!

நேபாளத்தில் வன்முறை வெடித்த நிலையில், அந்நாட்டில் இருந்து சுமார் 2,000 இந்தியர்கள் மேற்கு வங்கத்தின் பனிடான்கி எல்லை வழியாகத் தாயகம் திரும்பியுள்ளனர். நேபாள நாட்டில் சமூக வலைதளங்கள் தடை செய்யப்பட்டது ... மேலும் பார்க்க

அயோத்தி ராமர் கோயிலில் மோரீஷஸ் பிரதமர் வழிபாடு!

மோரீஷஸ் பிரதமர் நவீன்சந்திர ராமகூலம் அயோத்தி ராமர் கோயிலில் வழிபாடு மேற்கொண்டார். இந்தியா உடனான நல்லுறவை மேலும் விரிவாக்கும் நோக்கில், மோரீஷஸ் பிரதமா் ராமகூலம் 8 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்குக்... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் தாயார் குறித்த ஏஐ விடியோவால் சர்ச்சை! காங்கிரஸுக்கு பாஜக கண்டனம்!

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் குறித்து காங்கிரஸ் வெளியிட்டுள்ள சித்திரிப்பு விடியோவுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென், 2022 ஆம் ஆண்டில் காலமானார். இந்த நிலையில், அவ... மேலும் பார்க்க

கூகுள் செய்யறிவு பயன்பாட்டில் ஹிந்தி அறிமுகம்!

தேடுபொறி தளமான கூகுள் தன்னுடைய செய்யறிவு பயன்பாட்டில் இந்தியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த ஏஐ மோட், ஜெமினி 2.5 என்ற இயங்குதளத்தால் இயக்கப்படுகிறது.கூகுள் தேடுபொறி இணையதளம், முதலில் கடந்த மார்ச் மா... மேலும் பார்க்க