செய்திகள் :

ஜிஎஸ்டி குறைப்பு வரவேற்கத்தக்கது; ஆனால், பிகார் தேர்தல் காரணமா? - காங்கிரஸ் கேள்வி

post image

அத்தியாவசியப் பொருள்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி விகிதம் குறைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், வரவிருக்கும் பிகார் தேர்தலை மையமாக வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதா? என முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா. சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்.

56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தில்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று(செப்.3) நடைபெற்றது. இதில், ஜிஎஸ்டி வரியை எளிமையாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் அமைச்சர் நிர்மலா சீதாராமன், திருத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி விகிதங்களை அறிவித்தார்.

பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஜிஎஸ்டி வரியை எளிமைப்படுத்த முடிவு எடுக்கப்பட்டு,ஜிஎஸ்டி வரியை 2 அடுக்குகளாக குறைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்திருந்தாலும், 8 ஆண்டுகள் தாமதமானது ஏன் எனக் கேள்வியெழுப்பியுள்ளன.

இதுகுறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா. சிதம்பரம் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “பல்வேறு அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு வரவேற்கத்தக்கது. ஆனால், 8 ஆண்டுகள் மிகவும் தாமதமாக வந்துள்ளது.

ஜிஎஸ்டி விகிதம் மற்றும் தற்போது வரை உள்ள வரிவிதிப்புகளை முதலில் அறிமுகப்படுத்திருக்கவே கூடாது.

கடந்த 8 ஆண்டுகளாக ஜிஎஸ்டி வரி நிலையை மாற்றவேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், எங்களது கோரிக்கைகள் காதுகேளாதவர் காதில் விழுந்தது போல் இருந்தது.

வரிவிதிப்பில் மாற்றங்களைச் செய்ய அரசை தூண்டியது எது என்பதை ஊகிக்கவே ஆர்வமாக இருக்கும்.

  • நாட்டின் வளர்ச்சி மந்தமாக இருப்பதா?

  • வீட்டுக் கடன் அதிகரித்துள்ளதா?

  • சேமிப்பு குறைந்ததா?

  • பிகார் தேர்தல்?

  • டிரம்ப்பின் வரிவிதிப்பா?

  • மேற்கூறிய அனைத்தும்?” எனப் பதிவிட்டுள்ளார்.

அரசின் மீது தொடர்ச்சியாக கொடுக்கப்பட்ட அழுத்தத்திற்குப் பிறகு சாமானிய மக்களுக்கு கிடைத்த வெற்றி என திரிணமூல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

New GST rates: Congress, TMC welcome govt's ‘late’ revision

இதையும் படிக்க : ஜிஎஸ்டி வரிகள் குறைப்பு: வீட்டு உபயோகப் பொருள்கள் விலை குறையும்!

தில்லியில்.. சட்டவிரோதமாக வசித்த 15 வெளிநாட்டினர் வெளியேற்றம்!

தில்லியில், சட்டவிரோதமாக குடியேறி வசித்த 15 வெளிநாட்டினர் தங்களது தாயகங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். தலைநகர் தில்லியில், உரிய அனுமதி இல்லமலும், விசா காலாவதியாகியும் இந்தியாவில் வசித்து வரும் வெளிநா... மேலும் பார்க்க

பா.ஜ.க. அமைச்சர் வாங்கிய ரூ. 75 லட்சம் அமெரிக்க டெஸ்லா கார்!

அமெரிக்காவின் முன்னணி மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் கார் விற்பனை துவங்கியுள்ள நிலையில், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பாஜக அமைச்சர் ஒருவர் முதல் காரை வாங்கி, கார் விற்பனையை அமோகமாகத் துவங்கி ... மேலும் பார்க்க

நடுவானில் தொழில்நுட்ப கோளாறு: இந்தூரில் தரையிறங்கிய ஏர் இந்தியா!

நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏர் இந்தியா விமானம் இந்தூரில் அவசரகமாக தரையிறக்கப்பட்டது. 161 பயணிகளுடன் தலைநகர் தில்லியிலிருந்து இந்தூரை நோக்கி ஏர் இந்தியா விமானம் வெள்ளிக்கிழமை புறப்பட்... மேலும் பார்க்க

இந்தியா, ரஷியாவை சீனாவிடம் இழந்த அமெரிக்கா! டிரம்ப்பின் வஞ்சப் புகழ்ச்சியா?

சீனாவிடம் இந்தியாவையும் ரஷியாவையும் இழந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.டிரம்ப்பின் சமூக வலைத்தளப் பக்கமான ட்ரூத் சோசியலில், பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மற்... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி மாற்றம் நுகர்வோருக்கு முழு பலன்களை உறுதிசெய்யும்: கோயல்

ஜிஎஸ்டி பலன்கள் முழுமையாக நுகர்வோருக்குச் சென்றடைவதை உறுதி செய்ய மத்திய அரசு விழிப்புடன் இருக்கும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். ரொட்டி முதல் ஹேர் ஆயில், ஐஸ்கிரீம்கள் மற்றும் டிவிக்கள்... மேலும் பார்க்க

குஜராத் மின் நிலையத்தினுள் புகுந்த ஆற்று நீர்! மாயமான 5 தொழிலாளிகளின் நிலை என்ன?

குஜராத்தின், மஹிசாகர் மாவட்டத்தில் உள்ள நீர் மின் நிலையத்தினுள் திடீரென புகுந்த ஆற்று நீரில் சிக்கி மாயமான 5 தொழிலாளிகளைத் தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மஹிசாகர் மாவட்டத்தின், லுன... மேலும் பார்க்க