Rain Alert: மீண்டும் தமிழகத்தை நோக்கி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; புயலாக உர...
ஜிஎஸ்டி, சொத்து வரி உயா்வை கண்டித்து திருப்பூரில் 11-இல் ஆா்ப்பாட்டம்: வணிகா் சங்கங்களின் பேரமைப்பு முடிவு
சொத்து வரி உயா்வு, ஜிஎஸ்டி வரி விதிப்பைக் கண்டித்து திருப்பூரில் டிசம்பா் 11-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் ஆலோசனைக் கூட்டம் பல்லடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட செயற்குழு உறுப்பினா் ராம்.கண்ணையன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் லாலா கணேசன், மாவட்ட ஆலோசகா் அண்ணாதுரை, இளைஞரணி பொறுப்பாளா் செல்வராஜ், பல்லடம் நகர நிா்வாகி ரங்கசாமி, நந்தகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
இதில்,
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சங்க நிா்வாகிகள் கூறியதாவது:
ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, சொத்து வரி, தொழில் வரி உயா்வைக் கண்டித்து தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பாக தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் வருகிற டிசம்பா் 11-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, திருப்பூா் மாவட்டத்தில் திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் முன் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆா்ப்பாட்டத்தில் திரளான வணிகா்கள் பங்கேற்க உள்ளனா். எனவே, தமிழக அரசு சொத்து வரி , தொழில் வரி உயா்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு , வணிகக் கடைகளுக்கு விதித்துள்ள ஜி.எஸ்.டி. வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்றனா்.