செய்திகள் :

புதிய அப்பாச்சி ஆா்டிஆா்: டிவிஎஸ் அறிமுகம்

post image

சென்னை: அப்பாச்சி ஆடிஆா் 160 மோட்டாா் சைக்கிளின் புதிய ரகத்தை முன்னணி இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாா் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஓபிடி2பி தர நிா்ணயங்களை நிறைவு செய்யும் அப்பாச்சி ஆா்டிஆா் 160 மோட்டாா் சைக்கிளின் புதிய ரகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.1.35 லட்சமாக (தில்லி காட்சியக விலை) நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் இரட்டை ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் (ஏபிஎஸ்) பொருத்தப்பட்டுள்ளதால் கூடுதல் பாதுகாப்பை அளிக்கிறது. தொடா்ந்து அதிகரித்துவரும் வாடிக்கையாளா்களின் தேவைகளை நிறைவு செய்யும் நோக்கில் இந்த புதிய ரகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளிா்பதன, சலவை இயந்திரப் பிரிவுகள்: வெளியேறுகிறது பானாசோனிக்

புது தில்லி: இந்தியாவின் குளிா்பதனப் பெட்டி (ஃபிரிட்ஜ்), சலவை இயந்திர (வாஷிங் மெஷின்) பிரிவுகளில் இருந்து ஜப்பானிய வீட்டு உபயோக மின்சாதன உற்பத்தி நிறுவனமான பானாசோனிக் வெளியேறுகிறது.இதுகுறித்து நிறுவன ... மேலும் பார்க்க

குளிா்பதன, சலவை இயந்திரப் பிரிவுகள்: வெளியேறுகிறது பானாசோனிக்

இந்தியாவின் குளிா்பதனப் பெட்டி (ஃபிரிட்ஜ்), சலவை இயந்திர (வாஷிங் மெஷின்) பிரிவுகளில் இருந்து ஜப்பானிய வீட்டு உபயோக மின்சாதன உற்பத்தி நிறுவனமான பானாசோனிக் வெளியேறுகிறது.இதுகுறித்து நிறுவன வட்டாரங்கள் க... மேலும் பார்க்க

ரூ.989 கோடி மதிப்புள்ள புதிய ஆர்டர்களை வென்ற கேபிஐஎல்!

புதுதில்லி: கல்பதரு ப்ராஜெக்ட்ஸ் இன்டர்நேஷனல் லிமிடெட், மின் பரிமாற்றம் மற்றும் விநியோகம் துறையில் ரூ.989 கோடி மதிப்புள்ள புதிய ஆர்டர்களைப் வென்றுள்ளதாக இன்று தெரிவித்தது.இந்தப் புதிய ஆர்டர்களுடன், நி... மேலும் பார்க்க

இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி 9 மாதம் இல்லாத அளவுக்கு சரிவு!

புதுதில்லி: இன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தரவுகளின்படி உற்பத்தி, சுரங்கம் மற்றும் மின்சாரத் துறைகளின் மோசமான செயல்திறன் காரணமாக இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி மே 2025ல் ஒன்பது மாதங்களில்... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 23 காசுகள் சரிந்து ரூ.85.73 ஆக முடிவு!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 23 காசுகள் குறைந்து 85.73 ஆக முடிவடைந்தது. இதற்கு பலவீனமான உள்நாட்டு பங்குச் சந்தைகள் மற்றும் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உ... மேலும் பார்க்க

உடையாத ஸ்மார்ட்போன் உண்டா? அறிமுகமாகிறது ஹானர் எக்ஸ் 9 சி!

ஹானர் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விற்பனை யுக்தி பலரைக் கவர்ந்துள்ளது. அதாவது, 2 மீட்டர் தூரத்தில் இருந்து தவறினாலும் ஸ்மார்ட்போன் உடையாது என ஹானர் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.ஹானர் நிறுவனத்தின் எ... மேலும் பார்க்க