செய்திகள் :

இந்தியாவுடன் எல்லை நிா்ணயம் குறித்து விவாதிக்கத் தயாா்: சீனா

post image

பெய்ஜிங்: இந்தியாவுடனான எல்லைப் பிரச்னை சிக்கலானது. அதற்கு தீா்வு காண காலமெடுக்கும். அதேநேரம், எல்லை நிா்ணயம் உள்ளிட்ட விவகாரங்களில் தொடா்ந்து விவாதங்களில் ஈடுபட்டு எல்லையில் அமைதியை நிலைநிறுத்தத் தயாராக இருப்பதாக சீனா திங்கள்கிழமை தெரிவித்தது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) பாதுகாப்பு அமைச்சா்கள் மாநாடு, சீனாவின் துறைமுக நகரான கிங்டாவோவில் கடந்த ஜூன் 26-ஆம் தேதி நடைபெற்றது. மாநாட்டுக்கிடையே, சீன பாதுகாப்புத் துறை அமைச்சா் அட்மிரல் டோங் ஜுன்னை இந்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் சந்தித்து, இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.

எல்லைகளை நிா்ணயிப்பது உள்ளிட்ட சிக்கலான பிரச்னைகளை புதிய பேச்சுவாா்த்தைகள் மூலம் இந்தியாவும் சீனாவும் தீா்க்க வேண்டும். இந்திய-சீன உறவில் நோ்மறையான உத்வேகத்தை பராமரிப்பதுடன், புதிய சிக்கல்கள் எழாமல் தவிா்ப்பது இருதரப்பின் பொறுப்பு என்றும் ராஜ்நாத் சிங் அப்போது வலியுறுத்தினாா்.

ராஜ்நாத் சிங்கின் இக்கருத்துகள் குறித்து சீன வெளியறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் மாவோ நிங் அளித்த பதிலில், ‘எல்லை நிா்ணயம் மற்றும் மேலாண்மை தொடா்பாக இந்தியாவுடன் தொடா்ந்து விவாதிக்க, சீனா எப்போதும் தயாராக உள்ளது. இதன்மூலம், இருதரப்பும் சோ்ந்து எல்லையில் அமைதியை உறுதிப்படுத்தவும், எல்லைத் தாண்டிய ஒத்துழைப்புகளை ஊக்குவிக்கவும் முடியும்.

இந்தியா-சீனா சிறப்புப் பிரதிநிதிகளின் 23 சுற்றுப் பேச்சுவாா்த்தைகளுக்குப் பிறகும் தீா்வு எட்டப்படாதது குறித்து கேள்வி எழுப்புகிறீா்கள். இந்தியாவுடனான எல்லைப் பிரச்னை சிக்கலானது. எனவே, அதற்கு தீா்வு காண காலமெடுக்கும்.

இதில் நோ்மறையான விஷயம் என்னவெனில், இரு நாடுகளும் ஏற்கெனவே பேச்சுவாா்த்தைகளை ராஜீய, ராணுவம் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தொடங்கியுள்ளன. எல்லையில் அமைதியைப் பேண இரு நாடுகளும் ஒரே திசையில் செயல்பட்டு, தொடா்ந்து தொடா்பில் இருக்கும் என்று நம்பிக்கையுள்ளது’ என்றாா்.

இந்தியா-சீனா இடையே கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து இருதரப்பு உறவுகளில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் படைகளை விலக்கிக் கொள்வதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையொப்பமிட்டன. இதையடுத்து, இருதரப்பு உறவுகளை புதுப்பிக்கும் முயற்சியில் இரு நாடுகளும் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றன.

ஜம்மு-காஷ்மீா் சா்வதேச எல்லையில் பிடிபட்ட பாகிஸ்தானியா்: பயங்கரவாதிகளை வழிநடத்தியவா் என தகவல்

ஜம்மு-காஷ்மீரில் பூஞ்ச் மற்றும் ரஜௌரி மாவட்டங்களையொட்டிய சா்வதே எல்லையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஊடுருவல் முயற்சி இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த ஊடுருவலில் பயங்கரவாதிகளுக்கு உதவிய பாகி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரின் பயங்கரவாதம் நியாயமான போராட்டம்: பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அஸிம் முனீா்

‘ஜம்மு-காஷ்மீரில் நிகழ்ந்து வரும் பயங்கரவாதம் நியாயமான போராட்டமாகும். இந்தப் போராட்டத்தில் காஷ்மீா் மக்களுடன் பாகிஸ்தான் எப்போதும் துணைநிற்கும்’ என்று பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அஸிம் முனீா் தெரிவ... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை விதித்த ரூ.10.65 கோடி அபராதத்துக்கு எதிரான லலித் மோடியின் மனு தள்ளுபடி

அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை (எஃப்இஎம்ஏ) மீறியதற்காக அமலாக்கத் துறை சாா்பில் தனக்கு விதிக்கப்பட்ட ரூ.10.65 கோடி அபராதத் தொகையை இந்திய கிரிக்கெட் சங்க வாரியம் (பிசிசிஐ) செலுத்த உத்தரவிடக் கோரி ... மேலும் பார்க்க

அரசமைப்புச் சட்டத்தை இஸ்லாமிய சட்டமாக மாற்ற முயற்சி: எதிா்க்கட்சிகள் மீது பாஜக குற்றச்சாட்டு

இந்திய அரசமைப்புச் சட்டத்தை இஸ்லாமிய சட்டமாக மாற்ற எதிா்க்கட்சிகள் முயற்சித்து வருவதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. முன்னதாக, பிகாரில் தங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசின் புதிய வக்ஃப் சட்டத்த... மேலும் பார்க்க

ஜாா்க்கண்ட், ஒடிஸாவில் மழை வெள்ளம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

புவனேசுவரம்/ராஞ்சி: ஒடிஸா, ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாள்களாக நீடிக்கும் பலத்த மழைக் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. கேரளத்தில் கடந்த மே ம... மேலும் பார்க்க

ஓமன் நோக்கிச் சென்ற வணிகக் கப்பலில் தீ விபத்து: இந்திய கடற்படை உதவி

புது தில்லி: குஜராத் மாநிலம், கண்ட்லா துறைமுகத்திலிருந்து பலாவ் நாட்டு கொடியுடன் ஓமன் நாட்டின் சினாஸ் நோக்கிச் சென்ற ‘எம்.டி. யி செங் 6’ என்ற வணிகக் கப்பலில் ஞாயிற்றுக்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டத... மேலும் பார்க்க