செய்திகள் :

ஜிஎஸ்டி வரி குறைப்பு செப்.22 முதல் அமல் - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

post image

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இதில், அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார்.

இந்த கூட்டத்தில் 2 அடுக்குகளாக ஜிஎஸ்டி வரி வரம்பை குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அதன்படி இனி 5% மற்றும் 18% என மட்டுமே ஜிஎஸ்டி வரி அடுக்குகள் இருக்கும் என அவர் தெரிவித்தார். அதேநேரத்தில் சிறப்பு ஜிஎஸ்டி வரியாக ஆடம்பர பொருட்களுக்கு 40% வரி விதிக்கப்படும் என அவர் கூறினார்.

வரி குறைப்பு செப்டம்பர் 22-ம் தேதி முதல் அமலாகும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பில் ‘தினசரி மக்கள் பயன்படுத்தும் ஹேர் ஆயில், ஷாம்பு, டூத் பேஸ்ட், சோப்பு, ஷேவிங் கிரீம் உள்ளிட்டவற்றுக்கு 5% ஜிஎஸ்டி வரி மட்டுமே வசூலிக்கப்படும். கல்வி சார்ந்து எழுதுபொருளான பென்சில், ஷார்ப்னர், கிரேயான்ஸ், நோட்டுப்புத்தகம், எரேசர், வரைபடங்கள், சார்ட் உள்ளிட்டவற்றுக்கு ஜிஎஸ்டி வரியில் விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தனிநபர் ஆயுள் காப்பீடு, ஹெல்த் இன்சூரன்ஸ், உயிர் காக்கும் மருந்துகளுக்கு இனி ஜிஎஸ்டி வரி இல்லை. ஆட்டோமொபைல் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 18% குறைக்கப்படுகிறது. 350 சிசி திறன் மற்றும் அதற்கு மேல் உள்ள இருசக்கர வாகனங்கள், சொகுசு கார்களுக்கு 40% ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும். விவசாய உபகரணங்களுக்கு 5% ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள், பான் மசாலா, குட்கா, இனிப்பு கலந்த பொங்கலுக்கு 40% சிறப்பு ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

``மோடி, அமித் ஷா, பாஜக தான் திருடர்கள்'' - சட்டமன்றத்தில் கொந்தளித்த மம்தா பானர்ஜி; என்ன நடந்தது?

வங்காளிகளுக்கு எதிராக பாஜக:பாஜக ஆளும் மாநிலங்களில், வங்காளி மொழி பேசும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிரான கூறப்படும் துன்புறுத்தல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திரிணமூல் காங்கிரஸின் "பாஷ... மேலும் பார்க்க

TTV-OPS விலகலால், Amit shah தோற்கும் 60 தொகுதிகள், Vijay ஹேப்பி! | Elangovan Explains

தமிழ்நாடு பாஜக குறித்து சமீபத்தில் நிர்மலா சீதாராமன் வழங்கிய முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையொட்டி, பாஜக உயர்மட்ட குழு கூட்டத்தில், த.நா. பாஜகவினருக்கு அமித் ஷா கொடுத்த 5 ஆலோசனைகள் வழங்கப்பட்டதாக... மேலும் பார்க்க

Hot mic: ``உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை; 150 ஆண்டுகள் வரை வாழலாம்'' - அதிபர்கள் பேசிக்கொண்டது என்ன?

இரண்டாம் உலகப் போரின் 80வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பெய்ஜிங்கில் இராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டது. இந்த அணிவகுப்பைப் பார்வையிட, சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் ரஷ்ய அதிபர் புதின், வடகொரிய அதிபர் கிம் ஜாங்... மேலும் பார்க்க

சொத்துக் குவிப்பு வழக்கு; அமைச்சர் துரைமுருகனுக்கு பிடிவாரன்ட்; செப்., 15-க்குள் அமல்படுத்த உத்தரவு!

திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன், 2006 - 2011 ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது, 2007 - 2009 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 1.40 கோடி சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவரின் ம... மேலும் பார்க்க