வங்தேசம்: ஷேக் ஹசீனா ஆட்சியில் தோ்தல் முறைகேடு குறித்து விசாரணை
ஜிம்மி கார்டர் மறைவு: மோடி இரங்கல்
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் (வயது 100) மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 39-வது அதிபரான ஜிம்மி கார்டர் வயது மூப்பு காரணமாக ஜார்ஜியாவில் உள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் காலமானதாக தெரிவிக்கப்பட்டது.
இவரின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க : அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் காலமானார்!
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட இரங்கல் பதிவில்,
“அமெரிக்காவின் முன்னாள் பிரதமர் ஜிம்மி கார்ட்டர் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கு கொள்கிறேன். சிறந்த தொலைநோக்கு பார்வை கொண்ட அவர், சர்வதேச அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்காக அயராது உழைத்தார்.
இந்தியா - அமெரிக்கா உறவை வலுவடைவதற்கு அவரது பங்களிப்பு பெரிது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அமெரிக்க மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.