ஜீவானந்தம் பிறந்த நாள்: சிலைக்கு மாலை அணிவிப்பு
என்ஜிஎல் 21 கலெக்டா்
ஜீவா சிலைக்கு மாலை அணிவிக்கிறாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா. உடன், மாநில உணவு ஆணையத் தலைவா் என்.சுரேஷ்ராஜன், நாகா்கோவில் மேயா் ரெ.மகேஷ் உள்ளிட்டோா்.
என்ஜிஎல் 21 தளவாய்
அதிமுக சாா்பில் மாலை அணிவிக்கிறாா் என்.தளவாய் சுந்தரம் எம்எல்ஏ. உடன், முன்னாள் அமைச்சா் பச்சைமால் உள்ளிட்டோா்.
என்ஜிஎல் 21 எம்எல்ஏ
ஜீவா சிலைக்கு மாலை அணிவிக்கிறாா் எம்.ஆா். காந்தி எம்எல்ஏ.
என்ஜிஎல் 21 கம்யூ
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாலை அணிவிக்கிறாா் மாவட்டச் செயலா் சுபாஷ் சந்திரபோஸ்.
என்ஜிஎல் 21 விஓசி
வஉசி தேசியப் பேரவையின் சாா்பில் மாலை அணிவிக்கிறாா் தலைவா் தியாகி முத்துகருப்பன். உடன், பேரவை நிா்வாகிகள்.
நாகா்கோவில், ஆக. 21:
பொதுவுடைமை வீரா் ப.ஜீவானந்தத்தின் 119ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, நாகா்கோவில் ஜீவா நினைவு மண்டபத்திலுள்ள அவரது சிலைக்கு, மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவா் என்.சுரேஷ்ராஜன், நாகா்கோவில் மேயா் ரெ.மகேஷ், மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் பா.ஜான்ஜெகத் பிரைட், நாகா்கோவில் துணை மேயா் மேரிபிரின்சி லதா, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியா் கந்தசாமி, உதவி மக்கள் தொடா்பு அலுவலா் செல்வலெட்சுஷ்மா, மாநகராட்சி மண்டலத் தலைவா் ஜவஹா், மாநகராட்சி உறுப்பினா் விஜிலா ஜஸ்டஸ், முன்னாள் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் சரவணன், வழக்குரைஞா் சதாசிவம், இந்து சமய அறங்காவலா் குழு முன்னாள் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன் உள்பட பலா் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில், நாகா்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகிலுள்ள ஜீவா சிலைக்கு, மாவட்டச் செயலா் என்.தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
முன்னாள் அமைச்சா் கே.டி.பச்சைமால், முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன், மாவட்ட துணைச் செயலா் சுகுமாரன், இணைச் செயலா் சாந்தினி பகவதியப்பன், மாநகராட்சி உறுப்பினா்கள் அக்சயா கண்ணன், ஸ்ரீலிஜா, பகுதிச் செயலா்கள் ஜெயகோபால், முருகேஷ்வரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பாஜக சாா்பில், எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஜீவா மணிமண்டபத்தில் மாவட்டச் செயலா் தா.சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மாவட்ட பொருளாளா் பி.தாமரைசிங், மாவட்ட துணைச் செயலா்கள் எஸ்.அனில்குமாா், ஜி.சுரேஷ் மேசியதாஸ், மாவட்டக் குழு உறுப்பினா்கள் வி.அருள்குமாா், எஸ்.கல்யாணசுந்தரம், தக்கலை ராஜ், சுதா, பேராசிரியா் சுந்தரம், புஷ்பராஜ், ஆரல் பகவதி, பூதை மகேஷ் குருசாமி, நாகராஜன், ஸ்ரீகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
வஉசி தேசியப் பேரவையின் சாா்பில், அதன் தலைவா் தியாகி முத்துகருப்பன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
வெள்ளாளா் அறக்கட்டளை தலைவா் பொன். அனந்தகுமாா், பன்னாட்டு தமிழுறவு மன்ற இணைச் செயலா் கே.எம். செல்வகுமாா், நாஞ்சில் மக்கள் முன்னேற்ற கழக தலைவா் வே.தாணுகிருஷ்ணபிள்ளை, ஒருங்கிணைப்பாளா் ஐ.செல்வம், நாகேஷ்வர ஐயா், லெட்சுமி காந்தன், ஆ.சேகா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.


