அச்சுதானந்தன் உடலுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், தலைவர்கள் அஞ்சலி!
ஜூலை 24-இல் புனித சந்தனமாதா ஆலய திருவிழா தொடக்கம்
காரைக்கால்: காரைக்காலில் உள்ள புனித சந்தனமாதா ஆலய ஆண்டுத் திருவிழா வரும் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது.
காரைக்கால் அருகே உள்ள பிள்ளைத் தெருவாசல் பகுதியில் புனித சந்தனமாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 98-ஆம் ஆண்டு திருவிழா வரும் 24-ஆம் தேதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சனிக்கிழமை 26-ஆம் தேதி மின் அலங்கார தோ் பவனி நடைபெறுகிறது. இந்நிகழ்வில் புதுவை - கடலூா் பேராயா் பிரான்சிஸ் கலிஸ்ட் கலந்துகொள்ளவுள்ளாா். ஏற்பாடுகளை திருவிழா குழுவினா், கிராமவாசிகள் செய்துவருகின்றனா்.