செய்திகள் :

`விஜய், சீமானுக்கு அழைப்பு’ - கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி சொல்வது என்ன?

post image

2026 தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவும் - பாஜகவும் கூட்டணி அமைத்திருக்கிறது. ஆனால் ஆட்சி அதிகாரம் குறித்து இரு தரப்பினரிடையேயும் ஒரு வித சலசலப்பு இருந்துக்கொண்டேதான் இருக்கிறது.

அமித் ஷா தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்று கூறியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும் என்று பரப்புரையில் மீண்டும் மீண்டும் பதிவு செய்துக்கொண்டே இருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி, அமித் ஷா, அண்ணாமலை
எடப்பாடி பழனிசாமி, அமித் ஷா, அண்ணாமலை

இந்நிலையில் தனியார் பத்திரிகை ஒன்றிற்கு எடப்பாடி பழனிசாமி பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.

அதில் கூட்டணி ஆட்சி தொடர்பாகப் பேசிய எடப்பாடி பழனிசாமி, " தொண்டர்களை உற்சாகப்படுத்தவே கூட்டணி ஆட்சி என பாஜக கூறி வருகிறது. ஒற்றைக் கட்சி ஆட்சியையே தமிழ்நாட்டு மக்கள் விரும்புகிறார்கள். ஆட்சியில் பங்கு என்பதை தமிழ்நாட்டு மக்கள் விரும்பியதில்லை" என்று கூறியிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், " ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல என்பதை பாஜக தலைமைக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் கூறவில்லை. அதிமுகவை பாஜக விழுங்கிவிடும் என திமுக கூட்டணி கட்சிகள் கூறி வருவதற்கு பதிலளிக்கவே அப்படி பேசினேன்" என்று கூறியிருக்கிறார்.

TVK Vijay
TVK Vijay

மேலும் பேசிய அவர், " திமுகவை வீழ்த்துவதற்கு ஒத்தக் கருத்துடைய கட்சிகள் இணைவது அவசியம்" என்றிருக்கிறார். அவரிடம் இது விஜய்க்கு பொருந்துமா? என்று கேள்வி எழுப்பியதற்கு , "விஜய்யும் தி.மு.க. ஆட்சிக்கு எதிராகத்தான் போராடுகிறார். எனவே எல்லா கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்பது அவருடைய கட்சிக்கும் பொருந்தும்" என்று பதிலளித்திருக்கிறார்.

சீமானின் நாம் தமிழர் கட்சி குறித்து உங்கள் கருத்து என்ன? என்ற கேள்விக்கு, " எங்களது பொதுவான கருத்து என்னவென்றால், இந்த கட்சி அந்தக் கட்சி என்றில்லை, தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப நினைக்கும் யாராக இருந்தாலும் எங்கள் கூட்டணிக்கு வரலாம். தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. உரிய நேரத்தில் கூட்டணி குறித்த தெளிவான பார்வை கிடைக்கும்" என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

விலங்கு பண்ணை : அனைவரும் சமம். சிலர் கொஞ்சம் அதிக சமம் | Vikatan Play

ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய உலகப் புகழ் பெற்ற உருவக புதினம் விலங்குப் பண்ணை. இங்கிலாந்தில் 1945 ஆம் ஆண்டில் ஆகஸ்டு 17 ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்நாவல் ஏறத்தாழ உலகின் அனைத்து மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்டு... மேலும் பார்க்க

Stalin: ‘மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன்’ - முதல்வர் ஸ்டாலின் பதிவு

‘மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன்’ என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதை அடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை அப்போலோ மருத்துவமனையில் நேற்ற... மேலும் பார்க்க

Jagdeep Dhankhar ராஜினாமா: `நீதிபதிக்கு எதிரான மனு; 1 டு 4.30 மணிக்குள் ஏதோ.!’ - அப்செட் மத்தியஅரசு?

துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர் திடீரென தனது பதவிக்காலம் முடியும் முன்பாகவே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இது பல்வேறு விவாதங்களை கிளப்பி இருக்கிறது. ஏன் திடீரென பதவி விலகுகிறார் என்று எ... மேலும் பார்க்க

ஜகதீப் தன்கர் ராஜினாமா: "நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்" - பிரதமர் மோடி வாழ்த்து

குடியரசுத் துணைத் தலைவர் பதவியை ஜகதீப் தன்கர் ராஜினாமா செய்தார் - இதுதான் இந்திய அரசியல் களத்தின் தற்போதைய 'பரபர' டாப்பிக்.ஜகதீப் தன்கர் ராஜினாவும், சந்தேகங்களும்! உடல்நிலை காரணமாக ராஜினாமா செய்வதாக ஜ... மேலும் பார்க்க

"ஜெகதீப் தன்கரிடம் நட்டாவும், கிரணும் சொல்லவில்லை" - ஆய்வுக் குழுக் கூட்டம் குறித்து ஜெய்ராம் ரமேஷ்

துணை குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று (ஜூலை 21) அறிவித்திருந்தார்.உடல்நலக் காரணங்களைக் கருத்தில் கொண்டு மருத்துவ பரிசோதனைக்காக ராஜினாமா செய்வதாக அ... மேலும் பார்க்க

Jagdeep Dhankhar: 'திடீர் ராஜினாமா புதிராக இருக்கிறது; அழுத்தமா?' - எதிர்க்கட்சிகள் சொல்வதென்ன?

குடியரசு துணை தலைவர் பதிவியில் இருந்து ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று(ஜூலை 21) அறிவித்திருந்தார். உடல்நலக் காரணங்களைக் கருத்தில் கொண்டு மருத்துவ பரிசோதனைக்காக ராஜினமா செய்வதாக அறி... மேலும் பார்க்க