செய்திகள் :

எம்ஜியின் புதிய எலக்ட்ரிக் சொகுசு கார்! ஒருமுறை சார்ஜ் செய்தால் 548 கி.மீ. பயணம்!

post image

எம்ஜி நிறுவனம் தனது ப்ரீமியம் எலக்ட்ரிக் சொகுசு காரான எம்9 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

சர்வதேச சந்தையில் மேக்சஸ் மிஃபா 9 என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் காரை இந்தியாவின் எம்9 இவி என்ற பெயரில் எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

இந்தியாவில் ஜூலை 21 முதல் எம்9 காருக்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், ஆகஸ்ட் 10 முதல் டெலிவரி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்

  • 7 சீட்டர் வசதி கொண்ட இந்த காரின் அனைத்து சீட்டுகளுக்கும் ஏர் பேக் வசதி இருக்கின்றன.

  • 90 கேடபள்யூஎச் பேட்டரி ஒற்றை மின்சார மோட்டாருடன் வழங்கப்படுகிறது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 548 கி.மீ. செல்லும்.

  • தானியங்கி காலநிலை கட்டுப்பாடு, காரின் இரண்டாவது வரிசைக்கு திரைகள், மசாஜ் செயல்பாடுகளுடன் ஒட்டோமான் இருக்கைகள், ஏசி வென்ட்கள், பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை உள்ளன.

  • மெட்டல் பிளாக், வெள்ளை நிறம் - கருப்பு ரூஃப், கிரே நிறம் - கருப்பு ரூஃப் ஆகிய நிறங்களில் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.

  • சொகுசான பயணத்தை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த காரின் நீளம் 5,270 மி.மீ., 2,000 மி.மீ. அகலம், 2,840 மி.மீ. உயரம்.

  • டிஜிட்டல் ஓட்டுநர் டிஸ்பிளே, 360 டிகிரி கேமிரா, ஏர் ஃபில்டர், வயர்லெஸ் சார்ஜர், 13 ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம்.

  • முதலில் முன்பதிவு செய்பவர்களுக்கு வாழ்நாள் பேட்டரி வாரண்டி வழங்கப்படுகிறது. மற்றவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு வாரண்டி வழங்கப்படுகிறது.

  • இந்தியாவில் சென்னை உள்பட 13 நகரங்களில் 14 டீலர்கள் மூலம் மட்டுமே எம்9 விற்பனை செய்யப்படுகிறது.

  • இந்த காரின் ஆரம்ப விலை ரூ. 69.90 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

MG has launched its premium electric luxury car, the M9, in India.

இதையும் படிக்க : மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கூகுள் பிக்சல் 10: அறிமுக தேதி அறிவிப்பு

15% ஏற்றத்துடன் வெற்றி ஓட்டத்தில் எடர்னல்!

புதுதில்லி: ஜூன் வரையான காலாண்டு வருவாய்க்கு பிறகு, ஜொமாடோ மற்றும் பிளிங்கிட் பிராண்டுகளுக்குச் சொந்தமான உணவு விநியோக மற்றும் விரைவு வர்த்தக நிறுவனமான எடர்னல் பங்குகள் சுமார் 15 சதவிகிதம் உயர்ந்தன.பிஎ... மேலும் பார்க்க

சோலெக்ஸ் எனர்ஜியின் வருவாய் 84% அதிகரிப்பு!

புதுதில்லி: சோலார் தகடுகளை தயாரிப்பாளர் மற்றும் இ.பி.சி. சேவை வழங்குநருமான சோலெக்ஸ் எனர்ஜி ஏப்ரல் முதல் ஜூன் முடிய உள்ள காலாண்டில் அதன் வருவாய் 84 சதவிகிதம் அதிகரித்து ரூ.260 கோடியாக உள்ளதாக தெரிவித்த... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் குறைந்து ரூ.86.36 ஆக நிறைவு!

மும்பை: ஆகஸ்ட் 1 காலக்கெடுவிற்கு முன்னதாக அமெரிக்க-இந்தியா வர்த்தக ஒப்பந்தம் குறித்த நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், இன்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 5 காசுகள் குறைந்து ரூ.... மேலும் பார்க்க

நிலையற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 25,060.90 புள்ளிகளாகவும் சென்செக்ஸ் 82,186.81 புள்ளிகளாக நிறைவு!

மும்பை: இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 337.83 புள்ளிகள் உயர்ந்து 82,538.17 ஆக இருந்தது. நேரம் செல்ல செல்ல வேகம் இழந்தது, 30-பங்கு கொண்ட சென்செக்ஸ் 13.53 புள்ளிகள் சரிந்து 82,186.81 ஆகவும் 5... மேலும் பார்க்க

விவோ எக்ஸ் 200 எஃப்இ விற்பனை நாளை முதல் இந்தியாவில் தொடக்கம்!

விவோ எக்ஸ் 200 எஃப்இ ஸ்மார்ட்போன் கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகமான நிலையில், இதன் விற்பனை நாளை (ஜூலை 23) முதல் இந்திய சந்தைகளில் தொடங்கவுள்ளது. சிறந்த போட்டோகிராபி, பேட்டரி திறன், திரையின் தரம் ஆகியவ... மேலும் பார்க்க

லாபக் கணக்கில் ரிலையன்ஸ் பவர்! அனில் அம்பானியின் ஏறுமுகத்துக்கு என்ன காரணம்?

கடன், நஷ்டம் போன்ற செய்திகளால் மட்டும் பிரபலமடைந்து வந்த தொழிலதிபர் அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் பவர் நிறுவனம் தற்போது, தொடர்ச்சியான காலாண்டுகளில் லாபம் ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. தொடர்ந்து இ... மேலும் பார்க்க