ரூ.12 ஆயிரத்திற்குள் அதிக பேட்டரி திறனுடன் ஸ்மார்ட்போன்! ஓப்போ கே 13எக்ஸ்!
Jagdeep Dhankhar: 'திடீர் ராஜினாமா புதிராக இருக்கிறது; அழுத்தமா?' - எதிர்க்கட்சிகள் சொல்வதென்ன?
குடியரசு துணை தலைவர் பதிவியில் இருந்து ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று(ஜூலை 21) அறிவித்திருந்தார்.
உடல்நலக் காரணங்களைக் கருத்தில் கொண்டு மருத்துவ பரிசோதனைக்காக ராஜினமா செய்வதாக அறிவித்திருந்தார். அவரின் திடீர் ராஜினாமா அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்திற்கு வரும் எம்.பிகளிடம் ஜெகதீப் தன்கரின் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
அந்தவகையில் ஜெகதீப் தன்கரின் ராஜினாமா குறித்து பேசிய மதிமுக எம்.பி துரை வைகோ, " அவரின் ராஜினாமா ஆச்சரியமாக இருக்கிறது. அவர் உடல்நிலைக் காரணங்களைக் குறிப்பிடுகிறார். அவரின் உடல்நிலை குணமாகப் பிராத்திக்கிறேன்" என்றிருக்கிறார்.

"ராஜினாமாவுக்கான காரணம் அவருக்குத் தான் தெரியும். இதைப்பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. அரசுக்கும் அவருக்கும் தான் அது தெரியும். அவர் ராஜினாமாவை ஏற்க வேண்டுமா வேண்டாமா என்பது அரசின் விருப்பம்." என்று காங்கிரஸ் தலைவர்மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்திருக்கிறார்.
"ஜெகதீப் தன்கர் நலமுடன் இருக்க வேண்டுகிறேன். ஆனால், அவருடைய ராஜினாமா ஒரு புதிராக இருக்கிறது. ஏன் திடீரென்று ராஜினாமா செய்தார் என்று தெரியவில்லை. அதிர்ச்சியாக இருக்கிறது. அவர் திடீர் அறிவிப்பிற்கு உரிய விளகத்தைக் கொடுக்க வேண்டும்" என்றிருக்கிறார் காங்கிரஸ் எம்.பி மணீஷ் திவாரி.
காங்கிரஸ் ராஜ்யசபா எம்பி அகிலேஷ் பிரசாத் சிங், " நான் அவரை மாலை 5:30 மணிக்கு சந்தித்தேன், அவர் மிகவும் நன்றாக இருந்தார். அவர் கொண்ட ஒரே கவலை என்றால், விவாதம் எப்படியாவது நடைபெற வேண்டும் மற்றும் சபை ஒழுங்காக செயல்பட வேண்டும் என்பதுதான்... இது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. ஆளும் கட்சி இதில் தலையிட்டு அவரை மீண்டும் அந்தப் பதவியில் நியமிக்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.
திமுக எம்.பி டி.ஆர் பாலு, ``அழுத்தம் காரணமாக இந்த ராஜினாமா நிகழ்ந்திருக்கலாம்” என பதிலளித்தார்.