சாத்தான் குளம் தந்தை - மகன் வழக்கு: உண்மையைக் கூறுவதாக கைதான காவலர் மனு!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம்! ஜூலை 28 உள்ளூர் விடுமுறை
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் வரும் 28ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்துக்கு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் பிரசித்தி பெற்ற ஆடிப்பூரத் திருவிழா வருகிற ஜூலை 28-ஆம் தேதி நடைபெறுகிறது.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலானது, ஆண்டாள், பெரியாழ்வார் ஆகிய இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புக்குரியது. இங்கு ஆண்டு தோறும் ஆண்டாளின் அவதார நாளான ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில் தேரோட்டத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டுகடந்த ஜூன் 6-ஆம் தேதி ஆடிப்பூரப் பந்தல் அமைத்து, தேருக்கு முகூா்த்தக் கால் நட்டு, தேரை அலங்கரிக்கும் பணிகள் தொடங்கின. தொடர்ந்து கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டத் திருவிழா ஜூலை 20 காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜூலை 28-ம் தேதி காலை ஆடிப்பூரத் தேரோட்டம் நடைபெறுகிறது. அன்றைய தினம் விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
28-ம் தேதி காலை 9:05 மணிக்கு முக்கிய நிகழ்வான திருஆடிப்பூரத் தேரோட்டம் நடைபெறுகிறது. அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.வெங்கட்ராமராஜா, உறுப்பினர்கள் மற்றும் செயல் அலுவலர் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.