கிங்டம் டிரைலர் ரிலீஸ் தேதி!
விஜய் தேவரகொண்டா நடித்துள்ள கிங்டம் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். கடைசியாக, இவர் கல்கி 2898 ஏடி எனும் திரைப்படத்தில் அர்ஜுனர் பாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது, நடிகர் விஜய் தேவரகொண்டா ஜெர்ஸி படத்தின் இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. சில மாதங்களுக்கு முன் படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.
சமூகப் பிரச்னையை முன்வைத்து திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டு, வரும் ஜூலை 31 ஆம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், படத்தின் டிரைலர் வரும் ஜூலை 26ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
