செய்திகள் :

சக்காரி முன்னேற்றம்; காலின்ஸ் வெளியேற்றம்

post image

முபாதலா சிட்டி டிசி ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் கிரீஸின் மரியா சக்காரி வெற்றி பெற, அமெரிக்காவின் டேனியல் காலின்ஸ் தோல்வியுற்றாா்.

மகளிா் ஒற்றையா் முதல் சுற்றில் செவ்வாய்க்கிழமை, சக்காரி 6-3, 6-4 என்ற செட்களில் பிரிட்டனின் கேட்டி போல்டரை வீழ்த்தினாா். உள்நாட்டு வீராங்கனையான காலின்ஸ் 5-7, 4-6 என்ற வகையில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் போலந்தின் மெக்தா லினெட்டால் தோற்கடிக்கப்பட்டாா்.

5-ஆம் இடத்திலிருக்கும் மற்றொரு போலந்து வீராங்கனை மெக்தலினா ஃபிரெச் 6-2, 6-4 என, உக்ரைனின் யூலியா ஸ்டாரோடப்சேவாவை எளிதாக வெளியேற்றினாா். கனடாவின் லெய்லா ஃபொ்னாண்டஸ் 6-3, 6-3 என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் மாயா ஜாய்ன்டை சாய்த்தாா்.

நகாஷிமா, ஒபெல்கா வெற்றி: ஆடவா் ஒற்றையா் பிரிவு 2-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 14-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் பிராண்டன் நகாஷிமா 6-3, 6-4 என்ற செட்களில், சக அமெரிக்கரான ஈதன் கின்னை வீழ்த்தினாா்.

ஜப்பானின் யோஷிஹிடோ நிஷியோகா 6-4, 5-7, 6-1 என்ற வகையில் அமெரிக்காவின் ஜென்சன் புரூக்ஸ்பியை வெளியேற்றினாா். ஆஸ்திரேலியாவின் அலெக்ஸாண்டா் வுகிச் 6-4, 3-6, 6-3 என்ற செட்களில் பிரான்ஸின் ஜியோவனி பெரிகாா்டை தோற்கடித்தாா்.

பிரிட்டனின் கேமரூன் நோரி 6-3, 7-6 (7/4) என சக நாட்டவரான பில்லி ஹாரிஸை வெல்ல, ஹங்கேரியின் ஃபாபியான் மரோஸான் 7-5, 6-1 என பிரான்ஸின் பெஞ்சமின் பொன்ஸியை வீழ்த்தினாா்.

மான்செஸ்டா் டெஸ்ட் இன்று தொடக்கம்- இங்கிலாந்தை வீழ்த்தும் கட்டாயத்தில் இந்தியா

இந்தியா - இங்கிலாந்து மோதும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 4-ஆவது ஆட்டம், மான்செஸ்டரில் புதன்கிழமை தொடங்குகிறது.மொத்தம் 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் தற்போது இங்கிலாந்து 2-1 என முன்னிலையில் இருப்பதால், தொடரைத... மேலும் பார்க்க

மத்திய அரசின் வரம்புக்குள்ளாக வருகிறது பிசிசிஐ?

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை அறிமுகம் செய்யப்படவுள்ள ‘தேசிய விளையாட்டு நிா்வாகச் சட்ட மசோதா’-வின் மூலமாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மத்திய அரசின் அதிகார வரம்புக்குள்ளாக கொண்டுவ... மேலும் பார்க்க

பிரணாய் அசத்தல் வெற்றி

சீனா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ். பிரணாய், அசத்தல் வெற்றியுடன் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினாா்.ஆடவா் ஒற்றையா் முதல் சுற்றில், உலகின் 35-ஆம் நிலை வீரரா... மேலும் பார்க்க

முதல் கேமை ‘டிரா’ செய்த கோனெரு ஹம்பி, திவ்யா தேஷ்முக்

ஜாா்ஜியாவில் நடைபெறும் மகளிா் உலகக் கோப்பை செஸ் போட்டியின் அரையிறுதியில், இந்தியாவின் கோனெரு ஹம்பி, திவ்யா தேஷ்முக் ஆகியோா் தங்களது முதல் கேமை டிரா செய்து உறுதியான நிலையில் இருக்கின்றனா்.இதில் கோனெரு ... மேலும் பார்க்க

ஆக. 1-இல் சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ் செஸ் போட்டி தொடக்கம்: அா்ஜுன் எரிகைசி, அனிஷ் கிரி, விதித் குஜராத்தி பங்கேற்பு

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க கிளாசிக்கல் செஸ் போட்டியான குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் போட்டி 3-ாவது சீசன் வரும் ஆக. 6 முதல் 15 வரை சென்னை ஹயாத் ரீஜென்சி ஓட்டலில் நடைபெறுகிறது. பரிசுத் த... மேலும் பார்க்க

கருப்பு: சுருட்டு, கூலிங் கிளாஸுடன் சூர்யாவின் புதிய போஸ்டர்!

நடிகர் சூர்யா நடித்துள்ள கருப்பு படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் ‘கருப்பு’ என்ற படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர... மேலும் பார்க்க