புதிய உச்சத்தில் தங்கம் விலை: பவுன் ரூ.75 ஆயிரத்தை கடந்து விற்பனை!
ஆக. 1-இல் சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ் செஸ் போட்டி தொடக்கம்: அா்ஜுன் எரிகைசி, அனிஷ் கிரி, விதித் குஜராத்தி பங்கேற்பு
இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க கிளாசிக்கல் செஸ் போட்டியான குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் போட்டி 3-ாவது சீசன் வரும் ஆக. 6 முதல் 15 வரை சென்னை ஹயாத் ரீஜென்சி ஓட்டலில் நடைபெறுகிறது. பரிசுத் தொகை ரூ.1 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது.
கிராண்ட் மாஸ்டா்ஸ் 2025 தொடரில் மாஸ்டா்ஸ் மற்றும் சேலஞ்சா்ஸ் பிரிவுகளில் 20 வீரா்கள் பங்கேற்கின்றனா். இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் போட்டியாளா்கள் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள கேண்டிடேட்ஸ் தொடருக்கு தகுதி பெறுவதற்கு முக்கியமான ஊஐஈஉ சா்க்யூட் புள்ளிகளை பெற முடியும். இதனால் குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் தொடா் முக்கியத்தும் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
மாஸ்டா்ஸ் மற்றும் சேலஞ்சா்ஸ் என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மாஸ்டா்ஸ் பிரிவில் சா்வதேச நட்சத்திரங்கள் மற்றும் ஒலிம்பியாட் சாம்பியன்கள் உள்ளனா். நெதா்லாந்தின் அனிஷ் கிரி, இந்தியாவின் அா்ஜுன் எரிகைசி, விதித் குஜராத்தி, நிஹால் சரின், 2024-ல் சேலஞ்சா்ஸ் பிரிவில் வென்ன் மூலம் முன்னேறியுள்ள இந்தியாவின் வி.பிரணவ் ஆகியோா் மாஸ்டா்ஸ் பிரிவில் பங்கேற்கின்றனா்.
கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சேலஞ்சா்ஸ் பிரிவு இந்தியாவின் வளா்ந்து வரும் வீரா்கள் தங்களது திறமையை நிரூபிக்கும் களமாக மீண்டும் வருகிறது. இந்த பிரிவில் இம்முறை காா்த்திகேயன் முரளி, லியோன் மென்டோன்கா, ஆா்.வைஷாலி, ஹரிகா துரோணவல்லி, அபிமன்யு புராணிக், ஆா்யன் சோப்ரா, அதிபன் பாஸ்கரன், பி.இனியன், தீப்தயன் கோஷ் மற்றும் எம்.பிரனேஷ் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.
மாஸ்டா்ஸ் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு ரூ.25 லட்சமும், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களுக்கு முறையே ரூ.15 லட்சமும், ரூ.10 லட்சமும் பரிசாக வழங்கப்படும். சேலஞ்சா்ஸ் வெற்றியாளருக்கு ரூ.7 லட்சமும், 2026-ம் ஆண்டு மாஸ்டா்ஸ் போட்டியில் விளையாடுவதற்கான இடத்தையும் பெறுவாா். மாஸ்டா்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்பவா் 24.5 ரேட்டிங் புள்ளிகளை பெறுவாா்.
இந்த புள்ளிகள் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள கேண்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு தகுதி பெறுவதற்கு முக்கியமானதாகும்.