செய்திகள் :

16 தமிழக கிராமங்களை மேம்படுத்த நடவடிக்கை: மத்திய அமைச்சர் பதில்

post image

நமது சிறப்பு நிருபர்

காலநிலை மாற்ற பாதிப்புகளை எதிர்கொள்ளும் கடலோர கிராமங்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 16 கிராமங்கள் தேர்வாகியுள்ளதாக திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் சசிகாந்த் செந்திலின் கேள்விக்கு மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் செவ்வாய்க்கிழமை அளித்துள்ள பதிலில், "மத்திய மீன்வளத் துறையால் பிரதமரின் மத்ஸ்ய சம்பதா யோஜனாவின் அங்கமாக காலநிலை பாதிப்புகளை எதிர்கொள்ளும் 100 கடலோர மீனவ கிராமங்களை மேம்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதில், தமிழகத்தில் 16 கடலோர மீன்பிடி கிராமங்கள் மேம்பாட்டுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

கடற்பாசி வளர்ப்பு, செயற்கை கடலடிப்பவளப்பாறைகள் அமைத்தல் மற்றும் காலநிலை மாற்றத்தால் மீன்வளத் துறையில் ஏற்படும் தாக்கங்களை நேரடியாக எதிர்கொள்ளும் வகையில் கடலோர மீன்பிடி கிராமங்களை ஊக்குவித்தல் போன்ற முன்முயற்சிகளை பிரதமரின் மத்ஸ்ய சம்பதா யோஜனா ஒருங்கிணைக்கிறது என அமைச்சர் கூறியுள்ளார்.

மே.வங்கத்தில் மின்னல் பாய்ந்து 13 பேர் பலி!

மேற்கு வங்கத்தின் பங்குரா மற்றும் புர்பா பர்தாமன் ஆகிய மாவட்டங்களில், இன்று (ஜூலை 24) மின்னல் பாய்ந்து 13 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்குரா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், இன்று (ஜூலை 2... மேலும் பார்க்க

அரசமைப்பில் மதச்சார்பின்மை நீக்கப்படாது... ஆனால்! - மத்திய அரசு பதில்

புது தில்லி: அரசமைப்புச் சட்டத்தில் சமதா்மம், மதச்சாா்பின்மை ஆகிய சொற்களை நீக்குவதற்கான நடவடிக்கை எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இன்று(ஜூலை 24) மாநிலங்களவை கூட்டத்தொட... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விபத்து நடந்த 4 நாள்களில் 112 விமானிகள் மருத்துவ விடுப்பு!

அகமதாபாத் நகரில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் விழுந்து தீப்பற்றிய விபத்தைத்தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவன விமானிகள் பலர் விடுப்பில் சென்றிருப்பது அதிகரித்துள்ளது.விமான விபத்துக்குப்பின் 1... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 15 மாவோயிஸ்டுகள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த 15 மாவோயிஸ்டுகள், பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர். தண்டேவாடா மாவட்டத்தில், வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த தம்பதி உள்பட 15 மாவோயிஸ்ட... மேலும் பார்க்க

இனி இந்த பொருள்களின் விலை குறையும்! பிரிட்டனுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையொப்பம்!

இந்தியா - பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வியாழக்கிழமை (ஜூலை 24) கையெழுத்தானது. பிரதமா் நரேந்திர மோடி பிரிட்டன், மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக புதன்கிழமை சென்றுள்ளார... மேலும் பார்க்க

திருப்பதியில் வழங்கப்படும் ஸ்ரீவாணி தரிசனம் யாருக்குக் கிடைக்கும்?

திருப்பதி திருமலையில், ஸ்ரீவாணி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்காக புதிய டிக்கெட் வழங்கும் மையம் கோயில் நிர்வாகம் சார்பில் திறக்கப்பட்டுள்ளது.ஏழுமலையான் பக்தா்கள் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளை பெற... மேலும் பார்க்க