இட்லி கடை: தனுஷ் எழுதிப் பாடிய காதல் பாடல்!
நடிகர் தனுஷின் இட்லி கடை படத்தின் முதல் பாடலை அவரே எழுதிப் பாடியுள்ளதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது.
சமீபத்தில் குபேரா ஓடிடியில் வெளியானது. ரூ.100 கோடிக்கு மேல் இந்தப் படம் வசூலித்தது,
இப்படத்தைத் தொடர்ந்து தேரே இஷ்க் மெயின் படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ் தற்போது, இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடித்து வருகிறார்.
அடுத்ததாக, தனுஷ் நடிப்பில் வெளியாகும் இட்லி கடை திரைப்படம் வருகிற அக்.2 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
ஜி.வி. பிரகாஷ் இசையமைத்த இப்படத்தின் முதல் பாடல் வருகிற ஜூலை 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இது குறித்து ஜி.வி. பிரகாஷ் இன்ஸ்டாவில் தனுஷுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
இட்லி கடை படத்தில் முதல் பாடல் காதல் பாடலாக இருக்கும். இந்தப் பாடலை ஸ்வேதா, தனுஷ் பாடியுள்ளார்கள். இந்தப் பாடலை தனுஷ் எழுதியுள்ளார். இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடலாக இதுவே இருக்கிறது எனக் கூறியுள்ளார்.