செய்திகள் :

முழுமையாக விளையாடுங்கள் அல்லது ஓய்வெடுங்கள்; பும்ராவுக்கு முன்னாள் ஆல்ரவுண்டர் அறிவுரை!

post image

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முழுமையாக விளையாடுங்கள் அல்லது சரிவர ஓய்வெடுங்கள் என ஜஸ்பிரித் பும்ராவுக்கு இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அறிவுரை கூறியுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 23) மான்செஸ்டரில் தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.

தொடரை இழக்காமலிருக்க மான்செஸ்டர் டெஸ்ட்டில் வெற்றி பெற்றாக வேண்டும் அல்லது டிரா செய்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. கடைசி இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே பும்ரா விளையாடுவார் என்பது அணிக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

இர்பான் பதான் கூறுவதென்ன?

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முழுமையாக விளையாடுங்கள் அல்லது சரிவர ஓய்வெடுங்கள் என ஜஸ்பிரித் பும்ராவுக்கு இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் அறிவுரை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவரது யூடியூப் சேனலில் அவர் பேசியதாவது: ஜஸ்பிரித் பும்ரா மிகவும் அற்புதமான வீரர். அவரது திறமைகளை நான் முற்றிலும் விரும்புகிறேன். அவர் மிகவும் திறமைவாய்ந்த வீரர். இருப்பினும், இந்திய அணிக்காக ஒருவர் விளையாடும்போது, தன்னால் முடிந்த அளவுக்கு வெற்றிக்காக அனைத்தையும் கொடுக்க வேண்டும். ஒரு ஸ்பெல்லில் 5 ஓவர்கள் வீசும்போது, ரூட் பேட்டிங்குக்கு வரும்போது கூடுதல் முயற்சி செய்து 6-வது ஓவரை பும்ரா வீசவில்லை. நீங்கள் அணிக்காக அனைத்தையும் கொடுங்கள் அல்லது சரிவர ஓய்வெடுங்கள்.

நாடு அல்லது அணிக்காக விளையாடும்போது, உங்களுக்கு நாட்டின் அல்லது அணியின் நலனே எப்போதும் முதலாவதாக இருக்க வேண்டும். பும்ரா முயற்சி செய்யவில்லை எனக் கூறவில்லை. அவர் பந்துவீச்சில் ஈடுபடுகிறார். அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால், அணிக்காக கூடுதலாக முயற்சிகள் தேவைப்படும்போது, அதனை அவர் செய்ய வேண்டும். இங்கிலாந்து அணிக்காக பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் அதனை செய்கின்றனர் என்றார்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்திய அணியின் முன்னாள் வீரர் திலீப் வெங்சர்க்கார், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் ஜஸ்பிரித் பும்ரா விளையாடாதது குறித்து அதிருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இந்திய அணியின் நீண்டகால ஆல்ரவுண்டராக வாஷிங்டன் சுந்தர் உருவெடுப்பார்: ரவி சாஸ்திரி

The former all-rounder has advised Jasprit Bumrah to either play fully or get proper rest in the Test series against England.

ஹர்மன்ப்ரீத் சதம்: தொடரை வெல்ல இங்கிலாந்துக்கு 319 ரன்கள் இலக்கு!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய மகளிரணி 318 ரன்கள் குவித்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக முதல்முறையாக டி20 தொடரை இந்திய மகளிரணி ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியி... மேலும் பார்க்க

முத்தரப்பு தொடர்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அபாரம்!

முத்தரப்பு டி20 தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ஜிம்பாப்வேவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில் இன்றையப் போட்டிய... மேலும் பார்க்க

4-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங் செய்வார்: ஷுப்மன் கில்

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங் செய்வார் என இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.இந்தியா - இங்கிலாந்து இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி... மேலும் பார்க்க

முத்தரப்பு தொடர்: நியூசி.க்கு 135 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென்னாப்பிரிக்கா!

முத்தரப்பு டி20 தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்தது.ஜிம்பாப்வேவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில் இன்றை... மேலும் பார்க்க

கோலியைப் போலச் செய்வதை ஷுப்மன் கில் நிறுத்த வேண்டும்: மனோஜ் திவாரி

இந்திய டெஸ்ட் அணியின் தற்போதைய கேப்டன் ஷுப்மன் கில் முன்னாள் டெஸ்ட் கேப்டன் விராட் கோலியைப் போல் நடந்துகொள்வதை நிறுத்த வேண்டுமென மனோஜ் திவாரி கடுமையாக விமர்சித்துள்ளார். ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி... மேலும் பார்க்க

மான்செஸ்டர் ஆடுகளத்தை பார்வையிட்ட இங்கிலாந்து பயிற்சியாளர், கேப்டன்!

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெறும் மான்செஸ்டர் ஆடுகளத்தை இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பார்வையிட்டனர்.இந்தியா மற்றும் இங்கிலாந்... மேலும் பார்க்க