”திமுக-வுக்கு 8 மாதம்தான் ஆயுள்; இப்போதாவது நீட் ரத்து ரகசியத்தை சொல்லலாமே!”- எ...
மான்செஸ்டர் ஆடுகளத்தை பார்வையிட்ட இங்கிலாந்து பயிற்சியாளர், கேப்டன்!
இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெறும் மான்செஸ்டர் ஆடுகளத்தை இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பார்வையிட்டனர்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 23) மான்செஸ்டரில் தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
மான்செஸ்டர் டெஸ்ட்டில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து அணியும், இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை சமன் செய்யும் முனைப்பில் இந்திய அணியும் உள்ளது.
ஆடுகளத்தை பார்வையிட்ட பென் ஸ்டோக்ஸ்
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இருவரும் மான்செஸ்டர் ஆடுகளத்தைப் பார்வையிட்டனர்.
ஆடுகளத்தின் தன்மையைப் பொருத்து இங்கிலாந்து அணி தனது முடிவுகளை எடுக்கும் எனத் தெரிகிறது. டாஸ் வென்றால் என்ன செய்யலாம் என்ற நோக்கில் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் இருவரும் ஆடுகளத்தைப் பார்வையிட்டதாகத் தெரிகிறது.
நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. காயம் காரணமாக விலகிய சோயப் பஷீருக்குப் பதிலாக பிளேயிங் லெவனில் லியம் டாஸன் சேர்க்கப்பட்டுள்ளார்.
லியம் டாஸன் கடைசியாக கடந்த 2017 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்தார். அவர் 8 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளார்.
நான்காவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை இந்திய அணி இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: முழுமையாக விளையாடுங்கள் அல்லது ஓய்வெடுங்கள்; பும்ராவுக்கு முன்னாள் ஆல்ரவுண்டர் அறிவுரை!