ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம்! ஜூலை 28 உள்ளூர் விடுமுறை
5-வது நாளாக ஏறுமுகத்தில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.74,280-க்கு விற்பனையாகிறது.
வாரத்தின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை ஒரு கிராம் தங்கம் விலை ரூ.105 உயர்ந்து ரூ.9,285க்கும், ஒரு சவரன் விலை ரூ.840 உயர்ந்து ரூ.74,280-க்கும் விற்பனையாகி வருகிறது.
சென்னையில் சமீபத்திய காலமாகவே தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்துவந்தாலும், கடந்த வாரமாக தங்கம் விலை ஏறுமுகமாக இருந்து வருகிறது.
வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.40 உயா்ந்து ரூ.72,880-க்கும், வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.40 உயா்ந்து ரூ.72,880-க்கும், சனிக்கிழமை அதிரடியாக சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.73,360-க்கும், நான்காவது நாளாக சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.73,440க்கு விற்பனையானது. கடந்த 5 நாள்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1480 அதிகரித்துள்ளது.
In Chennai, the price of gold jewelry has increased by Rs. 840 per sovereign, selling for Rs. 74,280.
இதையும் படிக்க :ராஜிநாமா முடிவை மறுபரிசீலனை செய்க..! - ஜகதீப் தன்கருக்கு காங்கிரஸ் வேண்டுகோள்