சாத்தான் குளம் தந்தை - மகன் வழக்கு: உண்மையைக் கூறுவதாக கைதான காவலர் மனு!
பாக்கியலட்சுமி தொடரின் இறுதி நாள் படப்பிடிப்பில் கண்கலங்கிய நடிகை!
பாக்கியலட்சுமி தொடரின் இறுதி நாள் படப்பிடிப்பின்போது, ரசிகர்களுடன் நடிகை சுசித்ரா கண்கலங்கி உருக்கமாகப் பேசியுள்ளார்.
பாக்கியலட்சுமி தொடர் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது, இத்தொடரை இல்லத்தரசிகள் அதிகம் விரும்பிப் பார்க்கின்றனர்.
இந்தத் தொடரின் கதையின் பிரதான பாத்திரத்தில் நடிகை சுசித்ரா, பாக்கியலட்சுயாக நடித்து வருகிறார். தன்னுடைய இயல்பான நடிப்பால் இந்தத் தொடரின் வெற்றிக்கு வலுசேர்த்து வருகிறார்.
இத்தொடர் ஒரு சில வாரங்களில் நிறைவடையவுள்ள நிலையில், இறுதிக்கட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. பாக்கியலட்சுமி தொடரின் கிளைமேக்ஸ் காட்சிகள் விரைவில் ஒளிபரப்பு செய்யப்பாகவுள்ளன.
இந்த நிலையில், நடிகை சுசித்ரா பாக்கியலட்சுமி தொடரின் இறுதி நாள் படப்பிடிப்பில் இருக்கும்போது, இன்ஸ்டாகிராம் நேரலையில் ரசிகர்களுடன் பேசினார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட விடியோவில், ”பாக்கியலட்சுமி தொடர் நிறைவடையவுள்ள தகவல் உங்களுக்கு தெரியும், இந்தத் தொடர் வெற்றிகரமாக ஒளிபரப்பு செய்யப்பட்டதற்கு நீங்கள்தான் காரணம்.
நீங்கள் வழங்கிய அன்புக்கும் ஆதரவுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தொடரின் ஒளிபரப்புக்கு ஆதரவாக இருந்த சேனல் நிர்வாகம் உள்ளிட்ட அனைவருக்கும் ரொம்ப நன்றி.
அடுத்தத்தடுத்து நான் நடிக்கவுள்ள புதிய தொடர்களுக்கும் உங்களுடைய ஆதரவைக் கொடுக்க வேண்டும். நீங்கள் கொடுப்பீர்கள் என்று எனக்குத் தெரியும்.
5 ஆண்டுகளாக பாக்யாவாக வாழ்ந்துவிட்டேன். மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக உள்ளது. பாக்கியலட்சுமி தொடரின் கடைசி நாள் எபிசோடு எப்போது ஒளிபரப்பாகுமென்று எனக்குத் தெரியாது” என்று கண்ணீருடன் உருக்கமாகப் பேசினார்.