உச்சநீதிமன்றத்தால் பணிநீக்கம் செய்யப்பட்ட பள்ளிக் கல்வித் துறை ஊழியா்களுக்கு நித...
ஜெயக்குமார் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலின்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக குற்றம்சாட்டி திமுக உறுப்பினர் நரேஷ்குமார் மீது தாக்குதல் நடந்தது.
இச்சம்பவம் தொடர்பாக ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பாஜக அரசு தன்னுடைய தோல்வியை மறைக்கவே சிந்து நதியைத் தடுத்து நிறுத்துகிறது: சீமான்
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு நீதிமன்றத்தில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜெயக்குமார் மீதான கொலை முயற்சி வழக்கை ரத்து செய்ய நீதிபதி மறுப்பு தெரிவித்து விட்டார்.