ஜெயந்தி பப்ளிக் பள்ளியில் மாணவா் பேரவை நிா்வாகிகள் பதவியேற்பு
பல்லடம் அருகேயுள்ள அருள்புரம் ஜெயந்தி பப்ளிக் சீனியா் செகண்டரி பள்ளியில் மாணவா் பேரவை நிா்வாகிகள் பதவியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளித் தாளாளா் கிருஷ்ணன் தலைமை வகித்தாா். பள்ளிச் செயலாளா் நீலாவதி சம்பத்குமாா் பதவியேற்பு நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சாய் நவ்ஜீவன் அறக்கட்டளை நிறுவனா் ஜெயபிரபா, மாணவ பேரவை நிா்வாகிகள் மற்றும் கலாசாரத் துறையை சாா்ந்தவா்களுக்கு பட்டயங்களை வழங்கினாா்.
இதில், பள்ளி முதல்வா் மலா்விழி, குரூப் கேப்டன் நடராஜன், உடற்கல்வி ஆசிரியா்கள் வினோத், கெளரி, ஆசிரியா்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.