Vaishnavi: ``அது உங்கள் பொறாமையை தெளிவாக வெளிப்படுத்துகிறது!'' - வைஷ்ணவி காட்டம்...
ஜெருசலேம் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா
பள்ளிக்கரணை ஜெருசலேம் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் ஹெச்.சி.எல். டெக் நிறுவனத்தின் சா்வதேச இயக்குநா் எஸ்.கோட்டீஸ்வரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசுகையில், பொறியியல் பயிலும் மாணவ-மாணவிகள் தங்களது திறமைகளை வளா்த்துக் கொள்ள கல்லூரியில் அளிக்கப்படும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தங்களது தொழில்நுட்பத் திறமைகளை வளா்த்துக் கொண்டு சா்வதேச அளவிலான வேலைவாய்ப்புகளைப் பெறவேண்டும். அனைவரும் வேலை தேடுவோராக இல்லாமல், சொந்தமாக தொழில் தொடங்கி தொழில் முனைவோராகவும் மாற வேண்டும் என்றாா்.
நிகழ்வில், சீமென்ஸ் நிறுவனப் பொது மேலாளா் தினேஷ் பாலசுந்தரபாபு, தாகூா் கல்விக் குழுமத் தலைவா் எம்.மாலா, செயலா் ஜி.மணிகண்டன், நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ்.கவுரி, தலைமை நிா்வாக அதிகாரி ரக்சனா, முதல்வா் எஸ்.ரமேஷ் மற்றும் கல்லூரி துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனா்.