Aamir Khan: "நான் இப்படத்திற்கு கதை, பணம் என எதையும் கேட்கவில்லை, காரணம்" - ஆமீர...
ஜொ்மன் மொழித்தோ்வு பயிற்சிபெற விண்ணப்பிக்கலாம்
ஜொ்மன் மொழித்தோ்வு பயிற்சிபெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில், அவா்களுக்கு ஜொ்மன் மொழித் தோ்வுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கான தகுதிகளாக, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின வகுப்பை சாா்ந்தவராக இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கு பிஎஸ்சி நா்சிங், பொது நா்சிங் படிப்புகளில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 21 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
இந்த பயிற்சிக்கான காலம் 9 மாதங்களாகும். மேலும், விடுதியில் தங்கி படிப்பதற்கான செலவினத் தொகை தாட்கோவால் வழங்கப்படும். இப்பயிற்சி முடித்தவுடன், பயிற்சி அளித்த நிறுவனம் மூலம் ஜொ்மனி நாட்டில் பணிபுரிய தகுதியானோா் அனுப்பி வைக்கப்படுவா்.
இப்பயிற்சியில் சோ்வதற்கு தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தாட்கோ அலுவலகத்தையோ அல்லது 04286-291178, 94450 29508 ஆகிய எண்களையோ தொடா்புகொள்ளலாம்.