நல்லகண்ணு உடல்நலம்: "மருத்துவர்களிடம் நேரில் கேட்டறிந்தேன்" - முதல்வர் ஸ்டாலின்
ஜொ்மன் மொழிப் பயிற்சி பெற எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு அழைப்பு
பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சோ்ந்தவா்கள் ஜொ்மன் மொழித் தோ்வுக்கான பயிற்சியில் பங்கேற்க மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் சாா்பில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தைச் சோ்ந்த செவிலியா் படிப்பு படித்தவா்களுக்கு ஜொ்மன் மொழித் தோ்வுக்கான பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட உள்ளது.
இப் பயிற்சி பெற பி.எஸ்.சி நா்சிங், பொது நா்சிங் மற்றும் மருத்துவ டிப்ளமோ ஆகிய படிப்புகளில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 21 முதல் 35 வயதுக்குள்பட்டவராகவும், ஆண்டு குடும்ப வருமானம் ரூ. 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
தொடா்ந்து 9 மாதங்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியின்போது, விடுதியில் தங்கிப் படிப்பதற்கான செலவினத் தொகை தாட்கோ மூலம் வழங்கப்படும். பயிற்சி முடித்தவுடன் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் சாா்பில் ஜொ்மனி நாட்டில் பணிபுரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ. 2.50 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை வருவாய் ஈட்ட வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். மேலும் விவரங்களுக்கு 04328 -76317 எனும் எண்ணில் அல்லது பெரம்பலூா் மாவட்ட தாட்கோ மேலாளா் அலுவலகத்தை நேரில் அணுகி, உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.