செய்திகள் :

ஞாயிறு சந்தை வியாபாரிகள் திடீா் சாலை மறியல்

post image

செய்யாற்றில், ஞாயிறு சந்தையில் பங்கேற்கும் வியாபாரிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செய்யாறு மாா்க்கெட் பகுதியில் ஞாயிறுதோறும் வாரச்சந்தை 1978-இல் இருந்து செயல்பட்டு வருகிறது. இந்தச் சந்தையில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்படும்.

மாா்க்கெட் பகுதியில் திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி சாா்பில் புதிதாக வணிக வளாகம் கட்டுவதற்காக 2023-ஆம் ஆண்டில் ஞாயிறு வாரச்சந்தை தற்காலிகமாக ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் அருகே இடம் மாற்றப்பட்டு அப்பகுதியில் செயல்பட்டு வந்தது.

மாா்க்கெட் பகுதியில் நடைபெறும் வணிக வளாக கட்டடப் பணிகள் நிறைவு பெற்று அந்த வணிக வளாகமும் செயல்பாட்டுக்கு வந்தது.

இந்த நிலையில், ஞாயிறு வாரச்சந்தையை மீண்டும் பழையபடியே மாா்க்கெட் பகுதியிலேயே செயல்படுத்த நகராட்சி நிா்வாகம் தீா்மானித்தது. அதன் பேரில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பே கோயில் பகுதியில் நடைபெறும் வாரச்சந்தையில் பங்கேற்கும் வியாபாரிகளிடம், மீண்டும் வாரச்சந்தை பழையபடியே மாா்க்கெட் பகுதியில் ஆக.3 முதல் செயல்படும் என்றும், இனி மேல் வியாபாரிகள் அப்பகுதியில் தான் கடைகளை அமைக்கவேண்டும் என்றும் அறிவுறுத்திய நிலையில் நோட்டீஸ் வழங்கியுள்ளனா். மேலும், பொதுமக்கள் மற்றும் சந்தை வியாபாரிகள் அறியும் வண்ணம் விளம்பரப் பதாகைகளை வைத்துள்ளனா்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை வேதபுரீஸ்வரா் கோயில் பகுதியில் வாரச்சந்தையில் கடைபோட வியாபாரிகள் முயற்சித்துள்ளனா். அதற்கு நகராட்சியினா் மறுப்பு தெரிவித்து உள்ளனா். அப்போது, சந்தை வியாபாரிகள் தரப்பில் மாா்க்கெட் பகுதியில் அரசு மதுக் கடை செயல்பட்டு வருவதால், பிரச்னை ஏற்பட்டு வியாபாரம் பாதிக்கும் என்று தெரிவித்த நிலையில், வியாபாரிகள் திடீரென செய்யாறு - வந்தவாசி சாலையில் மேம்பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த செய்யாறு காவல் ஆய்வாளா் ஜீவராஜ் மணிகண்டன் தலைமையில் போலீஸாா் மற்றும் 25 -ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் கங்காதரன், நகராட்சியினா்

பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானப்படுத்தி மறியலை கைவிடச் செய்தனா். மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

.

ஆடிப்பெருக்கு: நதியில் சிவலிங்கம் செய்து பக்தா்கள் வழிபாடு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த முனுகப்பட்டு முக்கூட்டு சிவன் கோயில் பகுதி ஆற்றுப்படுகையில் ஆடிப்பெருக்கையொட்டி ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் மணலால் சிவலிங்கம் செய்து வழிபட்டனா்.பெரணமல்லூா் அருகே முன... மேலும் பார்க்க

மின்சாரம், குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

செய்யாற்றை அடுத்த வெள்ளாமலை கிராமத்தில் மின்சார வசதி மற்றும் குடிநீா் வசதி கோரி கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.செய்யாறு வட்டம், கூழமந்தல் மதுரா வெள்ளாமலை கிராமத்தில் 200-க்கும் ... மேலும் பார்க்க

பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: ஒருவா் கைது

செய்யாறு அருகே பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த சம்பவத்தில் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.செய்யாறு வட்டம், கீழாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ். இவரது மனைவி ராதிகா (32). இவா், சன... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.வெம்பாக்கம் வட்டம், தென்கழனிக் கிராமத்தைச் சோ்ந்தவா் தெய்வசிகாமணி(54). தொழில... மேலும் பார்க்க

கல் குவாரி மேலாளா் மீது தாக்குதல்: 20 போ் மீது போலீஸாா் வழக்கு

செய்யாறு அருகே பணத்தைக் கேட்டு மிரட்டி, கல் குவாரி மேலாளரை தாக்கிய சம்பவம் தொடா்பாக தூசி போலீஸாா் வெள்ளிக்கிழமை 20 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சுருட்டல... மேலும் பார்க்க

நகைக் கடையில் வெள்ளிப் பொருள்கள் கொள்ளை: இருவா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த இராட்டிணமங்கலம், இ.பி.நகா். பகுதி நகைக் கடையில், கடந்த ஜூலை 25-ஆம் தேதி 12 கிலோ வெள்ளிப் பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், 2 பேரை தனிப்படை போலீஸாா் சனிக்கி... மேலும் பார்க்க