செய்திகள் :

டங்ஸ்டன் சுரங்க ஏல விவகாரம்: அமைச்சர் துரைமுருகன் பதில்!

post image

டங்ஸ்டன் கனிமச் சுரங்க ஏலம் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி பகுதியில் 2,015.51 ஹெக்டேர் பரப்பில் டங்ஸ்டன் சுரங்கம் தோண்ட கடந்த நவம்பர் மாதத் தொடக்கத்தில் மத்திய அரசு ஏலம் விட்டு அனுமதி அளித்துள்ளது.

இந்த அனுமதியை ‘தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை’ வேதாந்தா குழுமத்தைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் ஸிங்க் லிமிடெட் நிறுவனம் பெற்றுள்ளது.

இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய கனிமவளத் துறை மாநில அரசை குற்றம்சாட்டியுள்ளது.

ஏலத்துக்கு முன்னர் தமிழ்நாடு அரசிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டதாகவும் ஏலத்துக்கு எதிராக மாநில அரசு உள்பட யாரும் எவ்விதக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்றும் மத்திய கனிமவளத் துறை கூறியது.

இதையும் படிக்க | சொல்லப் போனால்... அடுத்தது அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம்!

இதையடுத்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இதற்கு விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், 'டங்ஸ்டன் ஏலத்தால் சட்டம்-ஒழுங்கு சீர்கெடும் என 2023 அக்டோபரில் மத்திய அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், நான் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளேன்.

இந்த ஏலம் சட்டம்-ஒழுங்கு சூழ்நிலைக்கு வழிவகுக்கும், இதனை மாநில அரசே கையாளவேண்டிய சூழல் ஏற்படும். கனிமவளத் துறை ஆணையரின் கடிதத்தில், நில விவரங்கள் எதுவும் இல்லை.

அரிட்டப்பட்டியில் பல்லுயிர் தளம் உள்ளது. அது தெரிந்தே மத்திய அரசு ஏலம் விட்டுள்ளது. ஏல அறிவிப்புக்கு ஏன் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றால், தற்போதைய மத்திய அரசின் செயல்பாடுகளை அறிந்தவர்கள் அதை நன்கு அறிவார்கள். அது வீண் முயற்சிதான்.

சுரங்கம் குத்தகைக்கு வழங்கப்பட வேண்டும் என்பது மாநில அரசுக்குத் தெரியும். குத்தகையை மாநில அரசுதான் வழங்க வேண்டும்.

மாநில அரசின் எதிர்ப்பு இருந்தபோதிலும், மத்திய அரசு ஏலம் விடுத்தது ஏன்? முதல்வரின் கடிதத்துக்குப் பின்னரே, கனிமவளத் துறை அமைச்சகம் இந்த திட்டத்தை மறு ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது.

சுற்றுச்சூழல் மற்றும் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கருதி டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

746 சாலைகள் அமைக்க ரூ.804.59 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு

746 சாலைகள் அமைக்க ரூ.804.59 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.1452.97 கி.மீ. நீளமுள்ள 746 சாலைகள் அமைக்க ரூ.804.59 கோடியும் அச்சாலைகளின் 5 ஆண்டு ... மேலும் பார்க்க

தமிழர் திருநாளில் தமிழகம் தலைநிமிர உறுதி ஏற்போம்: விஜய் வாழ்த்து!

பொங்கல் திருநாளையொட்டி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.இது குறித்து தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் நடிகர் விஜய், ”பொங்கல் திருநாள்! உலகமே போற்றி வணங்கும் உழவர் ... மேலும் பார்க்க

100 நாள் வேலைத் திட்டம்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டத்தின் ஊதிய நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத... மேலும் பார்க்க

‘சென்னை சங்கமம்’ கலைத் திருவிழா: முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்!

சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.13) தொடக்கி வைத்தார்.கீழ்ப்பாக்கம் பெரியாா் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதா் ஆலயத் திடலில் தொடக்க விழா நடைபெறுற்று வருகிறது. இ... மேலும் பார்க்க

கவனம் ஈர்க்கும் இட்லி கடை பட புதிய போஸ்டர்கள்!

இட்லி கடை படத்தின் புதிய போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.ராயன் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் இயக்குநராகவும் குபேரா, இட்லி கடை படங்களில் நாயகனாகவும் நட... மேலும் பார்க்க

பிரேசில்: கனமழை மற்றும் நிலச்சரிவினால் 10 பேர் பலி!

பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவினால் 10க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.லத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரிய நாடான பிரேசிலில் ... மேலும் பார்க்க