செம்மரம் கடத்தல்: தமிழகத்தைச் சோ்ந்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ.6 லட்சம் அபராத...
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து ரூ.85.39 ஆக முடிவு!
மும்பை: இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து ரூ.85.39ஆக நிறைவடைந்தது.
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்த புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கைகளால் ரூபாய் உள்பட ஆசிய நாணயங்களின் மதிப்பு உயர்ந்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் வியட்நாமுடன் வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்துள்ள நிலையில், ஜூலை 9 ஆம் தேதி முன்பு இதுபோன்ற பல ஒப்பந்தங்கள் அறிவிக்கப்படலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.44ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு அதிகபட்சமாக ரூ.85.30 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.85.50 ஐ தொட்ட நிலையில், முடிவில் 16 காசுகள் உயர்ந்து ரூ.85.39ஆக முடிந்தது.
நேற்று (வியாழக்கிழமை) வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ 85.55 ஆக நிறைவடைந்தது.
இதையும் படிக்க:நிலையற்ற தன்மைக்கு மத்தியிலும் சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் முடிவு!