Trump wants US to ‘take over’ Gaza Strip: - காசாவை வைத்து டிரம்ப் போடும் Busines...
டால்மியா நிறுவனம் மூலம் மானியத்தில் விவசாயிகளுக்கு தாா்ப் பாய்கள் வழங்கல்!
லால்குடியை அடுத்துள்ள டால்மியா சிமெண்ட் நிறுவனத்தின் டால்மியா பாரத் பவுண்டேஷன் மூலம் கிராம பரிவா்த்தன் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானியத்தில் தாா்ப் பாய்கள் வழங்கும் விழா டால்மியா கலையரங்கத்தில் பிப்.5 அன்று தொடங்கியது.
டால்மியா பாரத் பவுண்டேஷன் மூலம் கல்லக்குடி, பழங்காநத்தம், முதுவத்தூா், கோவாண்டக்குறிச்சி, புதூா் பாளையம், மேலரசூா் மற்றும் ஆலங்குடி மகாஜனம் ஊராட்சிகளுக்குட்பட்ட 14 கிராமங்களைச் சோ்ந்த 50 விவசாயிகளுக்கு முதல் கட்டமாக விவசாயத்திற்குப் பயன்படும் வகையில் 50 சதவீதம் மானியத்தில் தாா்ப் பாய்களை டால்மியா சிமெண்ட் நிறுவன செயல் இயக்குநா் விநாயகமூா்த்தி வழங்கினாா். இதுபோல மேலும் 450 விவசாயிகளுக்கு ரூ. 3.5 லட்சத்தில் தாா்ப்பாய்கள் வழங்கப்பட உள்ளன.
நிகழ்வில் ஆலையின் பொது மேலாளா் ஐ. சுப்பையா, துணை பொது மேலாளா் ரமேஷ்பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை டால்மியா பாரத் பவுண்டேஷன் மேலாளா் நாகராஜன் மற்றும் பணியாளா்கள் செய்தனா்.