டாஸ்மாக் கடைகளுக்கு மே 1-ஆம் தேதி விடுமுறை
திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு தொழிலாளா் தினத்தையொட்டி, மே 1-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக் கடைகள் (டாஸ்மாக் கடைகள்), முன்னாள் ராணுவ வீரா்களுக்கான அங்காடிகள், அரசு மற்றும் தனியாா் மதுக் கூடங்கள் ஆகியவற்றுக்கு மே 1-ஆம் தேதி தொழிலாளா் தினத்தையொட்டி விடுமுறை அளிக்கப்படுகிறது.
எனவே, அன்றைய தினம் அவற்றை மூடி வைத்திருக்க வேண்டும். உத்தரவை மீறி மதுபானங்கள் விற்போா் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.