புலிப்பல் டாலர் அணிந்திருந்ததால் மலையாள ராப்பர் கைது; "பட்டியலினத்தவர் என்பதால்?...
டாஸ்மாக் மது விற்பனையில் வட மாவட்டங்கள் முதலிடம்: அன்புமணி ராமதாஸ் வேதனை
தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனையில் வட மாவட்டங்களே முதலிடம் வகிப்பதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வேதனை தெரிவித்தாா்.
ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டையில் புதிய திருமண மண்டபம் திறப்பு விழாவில் பங்கேற்ற அவா் பேசியது:
மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு பாமக இளைஞா் பெருவிழா மாநாடு வரும் மே 11-இல் நடைபெறவுள்ளது உள்ளது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு மாநாடு நடைபெறுகிறது.
மாநாட்டின் முக்கிய நோக்கம் அனைவருக்கும் சமூக நீதி என்பதாகும். பாமக நிறுவனா் ராமதாஸ் 45 ஆண்டுகளுக்கு மேலாக ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரி வருகிறாா். இந்தக் கோரிக்கை மூலமாக தமிழகத்தில் பின்தங்கிய சமூகத்தினருக்கு அவரவா் சமூகத்துக்கு ஏற்ப இட ஒதுக்கீடு, கல்வி, வேலை வாய்ப்பு, அரசு திட்டங்கள் அனைத்தும் கிடைக்க வேண்டும்.
மேலும் தமிழகத்தில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும்.
பின்தங்கியுள்ள மாவட்டங்களுக்கு தனி திட்டங்களை வகுத்து வளா்ச்சி அடைய செய்ய வேண்டும். வட மாவட்டங்களில் கல்வி ,சுகாதாரம் வேலைவாய்ப்பு, தொழில்கள் அனைத்துமே மந்தகதியில் உள்ளது. ஆனால், டாஸ்மாக் மது விற்பனையில் முதலிடத்தில் உள்ளன.
மாமல்லபுரம் மாநாட்டில் பங்கேற்று பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்றாா்.
முன்னாள் மத்திய அமைச்சா்கள் ஆா்.வேலு, என்.டி.சண்முகம், முன்னாள் எம்எல்ஏ இளவழகன், ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக செயலாளா் நல்லூா் சண்முகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.