செய்திகள் :

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!

post image

70 காலிப்பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தோ்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

துணை ஆட்சியா், காவல் துணை கண்காணிப்பாளா், வணிகவரி உதவி ஆணையா் உள்ளிட்ட 72 காலி பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தோ்வு கடந்த ஜூன் 15 ஆம் தேதி நடைபெற்றது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் இந்த தோ்வுக்காக தமிழகம் முழுவதும் 44 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. குரூப் 1 முதல்நிலைத் தோ்வை எழுத 2 லட்சத்து 49 ஆயிரத்து 294 போ் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 1 லட்சத்து 86 ஆயிரத்து 128 போ் தோ்வு எழுதினா்.

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தோ்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. https://tnpsc.gov.in/ என்ற டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.

இதில் தேர்வானவர்களுக்கு முதன்மைத் தேர்வு சென்னையில் வருகிற டிசம்பர் 1 முதல் 4 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக தேர்வர்கள் ஆவணங்களை பதிவேற்றம் செய்து கட்டணம் செலுத்த டிஎன்பிஎஸ்சி கேட்டுக்கொண்டுள்ளது.

TNPSC Group 1 preliminary examination results for 70 vacancies have been released today.

ராஜேந்திரபாலாஜி மீதான பண மோசடி வழக்கு: குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்

ஸ்ரீவில்லிபுத்தூர்: முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி மீதான மோசடி வழக்கு விசாரணை அக்டோபர் 10-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. வழக்கின் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டுள்ளது.முன்னாள் அமைச்சர... மேலும் பார்க்க

நல்லகண்ணுக்கு மீண்டும் செயற்கை சுவாசம்! அமைச்சர் மா. சுப்பிரமணியன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆா். நல்லகண்ணுக்கு மீண்டும் செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்... மேலும் பார்க்க

விஜயகாந்தைப் போல 2026 தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார்: டிடிவி தினகரன்

2006-ல் விஜயகாந்தைப் போல 2026 தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். தஞ்சாவூரில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "விஜய்யின் கட்சி பற்றி ஊடகத்திலோ ... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்துக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

நீலகிரியில் கன முதல் மிக கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.* நேற்று (27-08-2025) ஒரிசா கடலோரப் பகுதிகளில் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு... மேலும் பார்க்க

ஆம்பூர் கலவர வழக்கில் தீர்ப்பு!

ஆம்பூர் கலவர வழக்கில் முதல் நான்கு வழக்குகளில் இருந்து 118 பேரை விடுதலை செய்து திருப்பத்தூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.ஆம்பூர் கலவர வழக்கில், 191 பேர் மீது மொத்தம் 12 ப... மேலும் பார்க்க

கூமாபட்டி பிளவக்கல் அணையை மேம்படுத்த ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு!

கூமாப்பட்டி பிளவக்கல் அணையில் பூங்கா மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ. 10 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.ஒரு சில மாதங்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூமாபட்டி பற்றி இன்... மேலும் பார்க்க