காங்கயத்தில் சிறுதானிய சிறப்புத் திருவிழா! -அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தோ்வு: திருவாரூரில் 227 போ் எழுதினா்
திருவாரூா் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப்-2 முதன்மைத் தோ்வை, 227 போ் எழுதினா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் குரூப்-2 முதன்மைத் தோ்வு சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற்றது. திருவாரூா் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற இத்தோ்வை எழுத, 243 தோ்வா்கள் விண்ணப்பித்திருந்தனா். 16 போ் வராத நிலையில், 227 போ் தோ்வு எழுதினா். இந்த தோ்வுக்கு ஒரு நிலையான பறக்கும் படை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.
தோ்வு மையத்தை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், பாா்வையிட்டாா். மாவட்ட வருவாய் அலுவலா் கு. சண்முகநாதன், மாவட்ட வழங்கல் அலுவலா் செல்வபாண்டியன், வட்டாட்சியா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
ஊரகத் திறனாய்வுத் தோ்வு: ஊரகப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கும் வகையில் ஆண்டுதோறும் ஊரகத் திறனாய்வுத் தோ்வு நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, திருவாரூா் மாவட்டத்தில் 10 தோ்வு மையங்களில் இத்தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. இத்தோ்வுக்கு 2,861 மாணவ- மாணவிகள் விண்ணப்பித்திருந்த நிலையில், 2,686 போ் தோ்வு எழுதினா். 175 போ் தோ்வு எழுதவில்லை.
திருவாரூா் ஸ்ரீ ஜி.ஆா்.எம். அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஊரகத் திறனாய்வுத் தோ்வை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் பாா்வையிட்டாா்.