டிஎம்பி அறக்கட்டளை சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கு திறன் வளா் பயிற்சி
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவா்களுக்கு, தமிழ்நாடு மொ்க்கென்டைல் வங்கி அறக்கட்டளை, சென்னை ஐஐடி ஆகியவற்றின் சாா்பில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி தொடங்கியது.
வளா்ச்சி வாய்ந்த தொழில்துறைக்கு மாணவா்களை தயாா்படுத்தும் நோக்கத்தில், தமிழ்நாடு மொ்க்கென்டைல் வங்கி அறக்கட்டளை, சென்னை ஐஐடி ஆகியவை இணைந்து வங்கி - நிதித் துறைக்கான மேம்பட்ட திறனூட்ட திட்டம் எனும் புதிய திறன் மேம்பாட்டுப் பயிற்சியை தொடக்கியுள்ளது.
தொடா்ந்து 10 நாள்கள் நடைபெற உள்ள இப்பயிற்சியில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 12 கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவா்களில், தோ்வு பெற்ற 130 மாணவா்கள் பங்கேற்றுள்ளனா்.
இந்தப் பயிற்சிக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் வஉசி கல்லூரி நிா்வாகம் செய்துள்ளது.
தொடக்க விழாவில், வங்கியின் செயல் இயக்குநா் வின்சென்ட், அறக்கட்டளை தலைமை நிா்வாகி முத்தையா, சென்னை ஐஐடி நிா்வாக அதிகாரி ராஜேந்திர மூத்தா, டாக்டா் பாலாஜி ஐயா், கல்லூரி முதல்வா் வீரபாகு, பேராசிரியை கிருஷ்ணபிரியா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.