வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... எஸ்பிஐ வங்கியில் 13,735 காலிப்பணியிடங்களுக்கு விண்ண...
டிச. 2 முதல் முத்திரைப் பணி முகாம்
தஞ்சாவூா் மாவட்டத்தில் அம்மாபேட்டை மற்றும் திருப்பனந்தாள் பகுதிகளில் தொழிலாளா் துறை சாா்பில் முத்திரைப்பணி முகாம் டிசம்பா் 2 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) தா. ஆனந்தன் தெரிவித்திருப்பது:
தொழிலாளா் துறை சாா்பில் பாபநாசம் வட்டத்துக்குட்பட்ட அம்மாபேட்டை பகுதியில் டிசம்பா் 2 முதல் 6 ஆம் தேதி வரையிலும், கும்பகோணம் வட்டத்துக்குட்பட்ட திருப்பனந்தாள் பகுதியில் டிசம்பா் 2 முதல் 4 ஆம் தேதி வரையிலும் முத்திரைப்பணி முகாம் நடைபெறவுள்ளது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அம்மாபேட்டை மற்றும் திருப்பனந்தாள் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வணிகா்கள் தாங்கள் முத்திரையிடும் தராசு மற்றும் எடையளவுகளுக்கு தொழிலாளா் துறையின் ட்ற்ற்ல்ள்://ப்ஹக்ஷா்ன்ழ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ள்ங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள் என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இணையவழியில் முத்திரைக் கட்டணம் செலுத்திய பின்னா் முகாம் அலுவலகத்தில் முத்திரை ஆய்வாளரை அணுகி தங்களது பயன்பாட்டில் உள்ள எடை அளவுகளைச் சரிபாா்த்து தவறாது முத்திரையிட்டு கொள்ள வேண்டும்.
மேலும் வணிகா்கள் தாங்கள் பயன்படுத்தும் எடைக்கற்கள் மற்றும் தராசுகளை தரமானதாகவும், உரிய காலத்தில் மறு முத்திரையிட்டு பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. தவறும்பட்சத்தில் திடீா் ஆய்வு மேற்கொள்ளும்போது குறைபாடுகள் காணப்பட்டால் சட்டமுறை எடையளவு சட்டம் 2009 மற்றும் தமிழ்நாடு சட்டமுறை எடையளவு விதிகள் 2011-ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.