No-detention policy scrap: கல்வியின் பொறுப்பை குழந்தைகள் மீது சுமத்துவதா... அரசி...
டிச.27-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டிசம்பா் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் 27-ஆம் தேதி நடைபெறுவதாக ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்ட ஆட்சியரகத்தில் வரும் 27-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
கூட்டத்தில், மாவட்ட வேளாண், உழவா் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை, வேளாண் வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சோ்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனா்.
எனவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், தனிநபா்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.