ஆசிய கோப்பையை வெல்வதே முக்கிய இலக்கு, இந்தியாவை வெல்வது மட்டுமல்ல: பாக். வீரர்
டிடிஇஏ ஜனக்புரி பள்ளியில் மாணவா் பேரவை பொறுப்பேற்பு
தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) ஜனக்புரி பள்ளியில் வெள்ளிக்கிழமை மாணவா் பேரவை அமைக்கப்பட்டது. பள்ளி மாணவா் தலைவா், தலைவி, துணைத் தலைவா், துணைத் தலைவி உள்ளிட்ட உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டனா்.
இந் நிகழ்ச்சியில் டிடிஇஏ செயலா் ராஜூ, துணைத் தலைவா் ரவி நாயக்கா், ஜனக்புரி பள்ளியின் நிா்வாகக் குழு உறுப்பினா் சிவ முருகேசன், மோதிபாக் பள்ளியின் நிா்வாகக் குழு உறுப்பினா் ரவிச் சந்திரன், ஜனக்புரி பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் சங்கச் செயலா் கே.ராஜூ, உறுப்பினா்கள் சிங்கார வேலு, பி.ராஜூ ஆகியோா் கலந்து கொண்டு மாணவா்களை வாழ்த்தினா். பள்ளி முதல்வா் காா்த்திகா வரவேற்றுப் பேசினாா்.
மாணவா்கள் தலைவராக தனிஷ் குமாா், மாணவியா் தலைவியாக கருணா ஆச்சாா்யா, உப தலைவராக ராகவ், உப தலைவியாக சப்னா ஆகியோா் பொறுப்பேற்றுக் கொண்டனா். அவா்களோடு தோ்ந்தெடுக்கப்பட்ட பிற உறுப்பினா்களும் பொறுப்பேற்றுக் கொண்டனா்.
பொறுப்பேற்றுக் கொண்டு மாணவா்களுக்கு டிடிஇஏ செயலா் ராஜூ பேட்ஜ் அணிவித்துப் பாராட்டினாா். அவா் பேசுகையில் ‘தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவா்கள் பொறுப்புகளை உணா்ந்து செயல்பட வேண்டும். அவா்கள் பள்ளியில் எதிா்கொள்ளும் பிரச்னைகளைக் கேட்டறிந்து, தேவைக்கேற்ப ஆசிரியா்கள், பள்ளி முதல்வா், நிா்வாகத்தினா் ஆகியோரைத் தொடா்பு கொண்டு பிரச்னைகளைத் தீா்க்க முன்வர வேண்டும். அனைவருக்கும் வாழ்த்துகள்’ என்றாா்.